Home / Recipes / Vangi bath

Photo of Vangi bath by Krishnasamy Vidya Valli at BetterButter
808
4
0.0(0)
0

Vangi bath

Nov-23-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vangi bath RECIPE

கர்நாடகத்தின் பிரபலமான ரெசிபி இது. வாங்கி பாத் மசாலா பவுடர் மட்டும் ஏற்கனவே செய்து வைக்கலாம். மற்றபடி செய்வது சுலபம்தான் . லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ரைஸ் இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Karnataka
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. கத்தரிக்காய் -2
  3. வெங்காயம்-1
  4. பச்ச மிளகாய் - 1
  5. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. சீனி /வெல்லப்பொடி - 1 சிட்டிகை
  8. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி மிளகாய் வத்தல் - 1 முந்திரி பருப்பு - 10 பெருங்காயம் - 1 சிட்டிகை கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  9. புளி கரைசல் - 1 / 2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  11. நெய்/எண்ணெய் - 2தேக்கரண்டி
  12. வாங்கி பாத் மசாலா பவுடர் செய்வதற்கு தேவையானவை
  13. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  15. கடலைப்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி விதை - 1 / 4 தேக்கரண்டி
  17. மிளகாய் வத்தல் - 1
  18. ஏலக்காய், கிராம்பு - தலா 1
  19. பட்டை - 1 சிறிய துண்டு
  20. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  21. வெந்தயம் - 1 சிட்டிகை
  22. கஸகஸா- 1/ 4 தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொடுக்கப்பட்ட மசாலா பொருட்களை தனிதனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் கரகரப்பாகதிரிக்கவும். உடனடியாக உபயோகிப்பவர்கள் மொத்தமாகவும் வறுத்து திரிக்கலாம்
  2. சாதம் ரொம்ப குழையாமல் வடித்து வைக்கவும்
  3. வெறும் கடாயில் வேர்கடலை பருப்பு வறுத்துக்கொள்ளவும்
  4. அதை ஒண்ணு இரண்டாக தட்டிக் கொள்ளவும்
  5. நெய்யில் முந்திரிபருப்புவறுத்து வைக்கவும்
  6. கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு மிளகாய் வத்தல் பச்சமிளகாய் பெருங்காயம் வெங்காயம் தாளிக்கவும்
  8. பச்ச வாசனை போனவுடன் கத்தரிக்காய் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  9. நன்றாக வதக்கியபின் உப்பு புளி கரைசல் வாங்கி பாத் மசாலா பவுடர் ஒரு சிட்டிகை சீனி/வெல்லப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  10. பச்ச வாசனை போனவுடன் சாதம் வறுத்த வேர்கடலை பருப்பு சேர்த்து கிளறவும்
  11. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான வாங்கி பாத் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE