Home / Recipes / Red rice Pinapple sweet bath

Photo of Red rice Pinapple sweet bath by Krishnasamy Vidya Valli at BetterButter
641
5
0.0(0)
0

Red rice Pinapple sweet bath

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red rice Pinapple sweet bath RECIPE

அரிசி வகைகளில் காரமாகவே செய்து கொண்டிருந்தால் எப்படி? இனிப்பு பிரியர்களுக்கு ஏதாவது செய்யலாமே என கேட்பவர்களுக்கு இதோ இந்த சிவப்பு அரிசி பைனாப்பிள் ஸ்வீட் பாத்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிவப்பு பச்சரிசி(சம்பா பச்சரிசி) - 1 / 4 கப்
  2. பைனாப்பிள் பொடியாக நறுக்கியது - 1 / 2 கப்
  3. கல்கண்டு (டைமண்ட் ) - 1 /2கப்
  4. பால் - 1/2 கப்
  5. நெய் - 1/8 கப்
  6. முந்திரி பருப்பு பாதாம் பருப்பு கிஸ்மிஸ் - தலா 5
  7. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  8. விருப்பப்பட்டால் லெமன்கலர்- 1 சிட்டிகை

Instructions

  1. சிவப்பு அரிசியை மிக்ஸியில் ஒண்ணு இரண்டாகஉடைத்துக்கொள்ளவும்
  2. ஒரு பங்கு தண்ணீர் மற்றும் இரண்டு பங்கு பால் சேர்த்து வேக விடவும்
  3. கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் கிஸ்மிஸ் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  4. அதேகடாயில் பைனாப்பிள் போட்டு வதக்கவும்
  5. நன்றாக வதக்கியபின் கல்கண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விடவும். பைனாப்பிள் நன்றாக கல்கண்டுடன் சேரும் வரை கிளறவும்
  6. பாகு கெட்டியாக ஆரம்பிக்கும் போது மீதமுள்ள நெய் விட்டு பாலில் வேகவைத்த சிவப்பு அரிசியை சேர்க்கவும் . விருப்பப்பட்டால் லெமன் கலர் ஒரு சிட்டிகை சேர்க்கவும்
  7. விட்ட நெய் மேலே வரும் நிலையில் ஏலப்பொடியைதூவி வறுத்து வைத்த கிஸ்மிஸ் முந்திரி பாதாம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE