Home / Recipes / Chicken biriyani

Photo of Chicken biriyani by Surya Rajan at BetterButter
622
3
0.0(0)
0

Chicken biriyani

Nov-27-2017
Surya Rajan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. பாசுமதி அரிசி : 1 கப்
  2. சிக்கன் : ½ கிலோ
  3. எண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் : 3
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. கரம் மசாலா : 1 மேஜைக்கரண்டி
  10. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  11. பிரியாணி இல்லை : 1
  12. கல்பாசி : சிறிதளவு
  13. பட்டை : சிறிதளவு
  14. கிராம்பு : 2
  15. ஏலக்காய் : 2
  16. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  17. தயிர் : 3 மேஜைக்கரண்டி
  18. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  19. பிரியாணி மசாலா : 2 மேஜைக்கரண்டி
  20. கொத்தமல்லி தழை : ஒரு கையளவு
  21. புதினா : ஒரு கையளவு
  22. நெய் :  தேவையான அளவு

Instructions

  1. சிக்கன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
  2. 1 கப் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி பின் 10 நிமிடம் தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும் .
  3. 5 கப் தண்ணீர் கொதிக்க விட்டு 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பின் அரிசியை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் அரிசியை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் பட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கி அரைத்து எடுத்துக்கொள்ளவும்
  5. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் சிக்கன், அரைத்து வைத்துள்ள மசாலா தூள் , பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் , பொன்னிறமாக வதக்கிய வெங்காயம் , உப்பு , மிளகாய் தூள் , பிரியாணி மசாலா , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும் .
  7. ஒரு கணமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, பிரியாணி இலை , ஊற வைத்த சிக்கன் கலவை , புதினா , கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .
  8. பின் தேவையான தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் .
  9. பின் வேக வைத்த அரிசியை சேர்த்து கிளறி 3 - 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும் . ( அடி கணமான பாத்திரமாக இருக்க வேண்டும் ...இல்லையென்றால் அடி பிடித்து விடும் )
  10. கடைசியில் நெய் சேர்த்து இறக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE