Home / Recipes / Nonbu kanji with mutton keema

Photo of Nonbu kanji with mutton keema by Rabia Hamnah at BetterButter
1105
3
0.0(0)
0

Nonbu kanji with mutton keema

Nov-28-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Festive
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி – ஒரு கப் ( பாஸ்மதி அரிசி (அ) பொன்னி)
  2. கொத்து கறி-1/4 கி
  3. சிறு பருப்பு – அரை கப்
  4. மஞ்சள்தூள் – 2டீ ஸ்பூன்
  5. மசலாதூள் – 5 டேபில் ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. புதினா, மல்லி, ரம்பை இலை – தேவையான அளவ
  8. பல்லாரி – 2
  9. தக்காளி – 3
  10. கேரட் – 1
  11. முட்டைக்கோஸ் – 1/4 பகுதி
  12. பீன்ஸ் – 5
  13. உருளைகிழங்கு – 1
  14. தேங்காய் பால் – 2 கப்
  15. தாளிக்க:
  16. இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  17. நெய் -100, எண்ணெய் – 50 மில்லி
  18. தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
  19. பச்சை மிளகாய் – 2
  20. பட்டை – 2 பெரியது கிராம்பு – 2 ஏலக்காய் – 6
  21. கருவேப்பிலை – சிறிதளவு

Instructions

  1. சிறுபருப்பை இலேசாக வருத்து அவற்றுடன் அரிசியைக் கலந்து 20 நிமிடம் ஊற வைத்து நன்றாக அலசிய பின்பு அதில் மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு, புதினா, மல்லி இலைகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
  2. சாதம் நன்றாக குழைய வெந்தபின் அதனை நன்றாக் ஆற வைத்து தேவைக்கு சிறுது தண்ணீர் சேர்த்து மத்தை வைத்து கடையவும்.
  3. குக்கரில் நெய் , எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்
  4. பிறகு அதில் நறுக்கிய காய்கறிகளுடன் புதினா, மல்லி, கறி துண்டுகள் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக மசிய வேக வைத்து எடுக்கவும்.
  5. வேக வைத்த கறி மற்றும் காய்கறி கலவை நன்றாக வெந்த பின்பு ப்ளண்டரில் விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
  6. அடி கனமான சட்டியில் கடைந்த சாதம் மற்றும் கறி, காய்கறி விழுது சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் சூடு செய்யவும். அடி பாகம் பிடித்து விடாத வண்ணம் இடையில் கிளறி விடவும்.
  7. சிறுது கஞ்சி கொதிக்கும் பொழுது தேங்காய்பால் ஊற்றி மீண்டும் சூடு செய்யவும். கடைசியாக சிறுது பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பினை அணைக்கவும்.. சூடான சுவையுடன் கூடிய நோன்புக் கறிக்கஞ்சி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE