Home / Recipes / Tamarind rice

Photo of Tamarind rice by Asiya Omar at BetterButter
763
4
0.0(0)
0

Tamarind rice

Dec-05-2017
Asiya Omar
1200 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tamarind rice RECIPE

இது எங்கள் வீட்டு செய்முறை. சூப்பராக இருக்கும்.

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 4

  1. புழுங்கல் அரிசி - 300 கிராம்
  2. நல்ல எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
  3. கடுகு - அரை தேக்கரண்டி
  4. பெருங்காயப் பொடி - 2 பின்ச்
  5. புளி ஊற வைக்க பெரிய எலுமிச்சை அளவு
  6. தக்காளி,வெங்காயம் - சிறியது 1
  7. உப்பு - தேவைக்கு.
  8. வறுத்து பொடிக்க:-
  9. மிளகாய் வற்றல் -3-4
  10. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  11. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  12. எள்ளு - 1 தேக்கரண்டி
  13. முழு மல்லி -1 தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை -2 இணுக்கு.

Instructions

  1. முதலில் சோறை பக்குவமாக வடித்து ஆற வைக்கவும்.
  2. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவிட்டு தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
  3. வறுத்து பொடிப்பதற்கு முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கருவேப்பிலை வறுத்து எடுக்கவும்,பின்னர் வற்றல் வறுத்து எடுக்கவும்.
  4. அதே கடாயில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,எள்ளு வறுத்து எடுத்து ஆற விடவும்.
  5. ஆற வைத்ததை மிக்ஸியில் பொடித்து எடுத்து அத்துடன் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
  6. புளிச்சோறு கிண்ட ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,ஒரு வற்றல் கிள்ளி போட்டு,ஒரு இணுக்கு கறிவேப்பிலை ,பெருங்காயப்பொடி போட்டு அரைத்ததை போட்டு வதக்கவும்.
  7. சிறிது வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
  9. நன்கு கொதித்து வற்றியதும் ஆற வைத்த சோறு சேர்த்து கிண்டவும்.
  10. ஒரு சேர பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
  11. ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும்.
  12. சுவையான புளிச்சோறு தயார். எங்க ஊர் பக்க உணவு மட்டன் சுருட்டு கறி தான்.வெஜ் பிரியர்கள் மல்லித் துவையல் உருளை வருவல் சேர்த்து சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE