Home / Recipes / Capsicum aloo masala

Photo of Capsicum aloo masala by Krishnasamy Vidya Valli at BetterButter
183
3
0.0(0)
0

Capsicum aloo masala

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. குடைமிளகாய் - 2
  2. உருளைக்கிழங்கு - 2
  3. வெங்காயம் - 3
  4. பெங்களூர் தக்காளி -3
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  6. பட்டை - 2 துண்டு
  7. கிராம்பு ஏலக்காய் - தலா 5
  8. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  9. உப்பு - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  11. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  13. சீனி - 1 / 2 தேக்கரண்டி
  14. வெண்ணெய் /நெய்/எண்ணெய் - 4 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  16. பச்ச மிளகாய் - 2
  17. முந்திரி பருப்பு - 10
  18. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  19. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி

Instructions

  1. குடைமிளகாயை சதுரம் சதுரமாக நறுக்கி வைக்கவும்
  2. 1 வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. இரண்டு வெங்காயம் மற்றும் தக்காளியை தனிதனியே மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  4. குடைமிளகாயை தனியாக ஒரு தேக்கரண்டி எண்ணெய்/நெய் /வெண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. உருளைகிழங்கை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கி சிறிது வேக வைக்கவும்
  6. முந்திரி பருப்பு (பத்து நிமிடங்கள் ஊறவைத்தபின்)அரைத்து வைக்கவும்
  7. கடாயில் நெய் /வெண்ணெய் /எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் பச்ச மிளகாய் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்ச வாசனை போனவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்
  9. பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  10. மஞ்சள்பொடி உப்புசேர்த்து வதக்கவும்
  11. கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் தனியாபொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  12. வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வதக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்
  13. அரைத்த முந்திரி விழுதைசேர்த்துசுருளகிளறவும்
  14. கிரேவி கெட்டியாகி முதலில் விட்ட வெண்ணெய் /நெய் / எண்ணெய் மேலே வரும்நிலையில் சீனி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  15. கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சை சாறு சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE