Home / Recipes / No Bake Strawberry Praline Cake

Photo of No Bake Strawberry Praline Cake by Ayesha Ziana at BetterButter
511
3
0.0(0)
0

No Bake Strawberry Praline Cake

Dec-09-2017
Ayesha Ziana
25 minutes
Prep Time
2 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT No Bake Strawberry Praline Cake RECIPE

பிஸ்கட், ஸ்ட்ராபெரி, பிராஸ்டிங் எல்லாம் சேர்த்து செய்த கேக். மிகவும் ருசியானது.

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Whisking
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 3

  1. பிஸ்கட்(NICE பிராண்ட்) 24
  2. ஸ்ட்ராபெரி பியூரீ அல்லது ஸ்ட்ராபெரி அலங்கரிக்க
  3. ஆரஞ்சு 1 அல்லது 2
  4. பொடித்த சீனி ஆரஞ்சு ஜூஸ்காக
  5. ஸ்ட்ராபெரி பிராஸ்டிங் செய்ய: ஸ்ட்ராபெரி பியூரி 1 1/2 டேபிள் ஸ்பூன்
  6. உப்பில்லாத வெண்ணெய்(மிருதுவானது) 75 கிராம் உத்தேசம்
  7. பொடித்த சீனி 1 கப்
  8. உப்பு ஒரு சிட்டிகை
  9. வெனிலா எஸ்ஸென்ஸ் 1/4 ஸ்பூன்
  10. ப்ரலைன் செய்ய: முந்திரி 25 முதல் 30
  11. பொடித்த சீனி 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பிராஸ்டிங் செய்ய: முதலில் வெண்ணெய், உப்பு சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை விஸ்கால் நன்றாக அடிக்கவும். பின்னர் பொடித்த சீனியை சலித்து சேர்த்து மீண்டும் அடிக்கவும். பின்னர் எஸ்ஸென்ஸ், ஸ்ட்ராபெரி பியூரி சேர்த்து மீண்டும் பிராஸ்டிங் பதம் வரும் வரை அடிக்கவும்.
  2. ப்ரலைன் செய்ய: ஒரு பேனில் பொடித்த சீனி சேர்த்து கரைத்து, முந்திரி சேர்த்து கிளறவும். முந்திரி சீனியுடன் நன்றாக இணைந்ததும், ஒரு தட்டில் கொட்டி, சில நிமிடங்களில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ப்ரலைன் தயார். இதை அதிக அளவில் செய்து சேமித்தால், தேவைப்படும் போது கேக், புட்டிங் போன்றவற்றின் மேலே தூவி சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.
  3. ஆரஞ்சு பழத்தை ஜூஸர் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, பொடித்த சீனி சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. கேக் செய்ய: ஒரு சதுரம்/செவ்வகம் பாக்ஸில், முதலில் 8 பிஸ்கட்களை ஆரஞ்சு ஜூசில் நன்றாக நனைத்து, அடுக்கவும்.
  5. அதன் மேலே பிராஸ்டிங் தடவவும்.
  6. மீண்டும் பிஸ்கட் நனைத்து அடுக்கவும். மீண்டும் பிராஸ்டிங் தடவவும்.
  7. பின்னர் ப்ரலைன் தூவி, மேலே ஸ்ட்ராபெரி பழங்கள் அல்லது பியூரி வைத்து அலங்கரிக்கவும். பின்னர் பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது துண்டுகள் போட்டு பரிமாறவும்.
  8. அருமையான கேக் தயார். இது பார்ட்டிகளுக்கு ஏற்ற டெசர்ட்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE