Home / Recipes / Vegetable Paratha

Photo of Vegetable Paratha by Krishnasamy Vidya Valli at BetterButter
398
3
0.0(0)
0

Vegetable Paratha

Dec-10-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Paratha RECIPE

காய்கள் சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகள் கூட இந்த வெஜிடபிள் பராத்தா விரும்பி சாப்பிடுவார்கள் . ஒருவருக்கு இரண்டு பராட்டா வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Healthy

Ingredients Serving: 4

  1. காய்கள் - 1 1/2 கப் ( வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி குடைமிளகாய் காலிப்ளவர் )
  2. கோதுமை மாவு /மல்டி கிரன் மாவு - 1 1/2 கப்
  3. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 2 மேஜைகரண்டி
  4. உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள்பொடி-1தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  9. ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் - 4 தேக்கரண்டி மற்றும் பராட்டா வாட்டுவதற்கு தேவையான அளவு நெய் /எண்ணெய்
  11. சீரகம் - 2 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. வெங்காயம் தவிர மற்ற காய்களை குக்கரில் குழைய வேக வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வேகவைத்த காய்களை சேர்க்கவும்
  5. உப்பு மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் தனியா பொடி கரம் மசாலா பொடி சேர்க்கவும்
  6. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் சேர்க்கவும்
  7. நன்றாக வதக்கியபின் போட்டட்டோ மஷர் அல்லது கீரை கடையும் மத்து வைத்து நன்கு மசிக்கவும்
  8. சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும் சிறிது ஆறவிட்டு அதில் கோதுமை மாவு / மல்டி கிரன் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்
  9. நன்றாக பிசைந்து வைக்கவும் தண்ணீர் விட வேண்டாம் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்க்கவும்
  10. மாவை 8 உருண்டை களாக பிரித்து ஒவ்வொன்றாக வாழை இலையில் அல்லது பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி விட்டு பராட்டா களாக தட்டி தோசை கல்லில் எண்ணெய் /நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  11. தயிர் சாலட் உடன்பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE