Home / Recipes / Jaalar Murthaba

Photo of Jaalar Murthaba by Yasmin Shabira at BetterButter
1191
4
0.0(0)
1

Jaalar Murthaba

Dec-14-2017
Yasmin Shabira
35 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Sri Lankan
  • Hard
  • Dinner Party
  • Main Dish

Ingredients Serving: 3

  1. மைதா மாவு : 1 கப்
  2. கோதுமை மாவு : 1கப்
  3. தேங்காய் : 1 மூடி
  4. முட்டை : 2
  5. ஜீனி : 1 தேக்கரண்டி
  6. உப்பு : 1 தேக்கரண்டி
  7. ஸ்டஃப்பிங் செய்ய தேவையானவை::
  8. வெங்காயம் : 4
  9. தக்காளி : 1 (பெரியது)
  10. பச்சை மிளகாய் : 2
  11. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  12. கேரட் : 200 கிராம்
  13. மிளகாய் தூள் : 1 1/2 மேசைக்கரண்டி
  14. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
  15. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  16. கறி மசாலா : 1 தேக்கரண்டி
  17. எண்ணெய் : 3 மேசைக்கரண்டி
  18. உப்பு : தேவைக்கேற்ப
  19. நெய் : 2 மேசைக்கரண்டி
  20. முட்டை : 2

Instructions

  1. தேங்காய் துறுவி அரைத்து 3 - 4 முறை பால் எடுத்துக்கொள்ளவும்...
  2. பெரிய மிக்ஸி ஜாரில் மைதா மாவு கோதுமை மாவு, 2 முட்டை, ஜீனி, உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்...
  3. தேங்காய் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்...
  4. மாவு தண்ணி ஆகவும் கூடாது ரொம்பவும் திக்காகவும் கூடாது...
  5. கட்டி இல்லாமல் அரைந்த பிறகு மாவை வடிகட்டி கொள்ளவும்
  6. தோசைக்கல் சூடு வந்ததும் படத்தில் இருப்பது போன்ற ஜாலர் குவளையில் மாவை ஊற்றி ஜாலர் சுற்றவும்... ஜாலர் குவளை இல்லை என்றால் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் மாவை ஊற்றி மூடியில் ஓட்டை போட்டு பயன்படுத்தலாம்...
  7. படத்தில் உள்ளது போல ஜாலர் சுற்றவும்...
  8. குறைந்த தணலிலேயே வைக்க வேண்டும்... ஜாலர் வெந்த பின் அதன் மேல் சிறிது நெய் தடவவும்...
  9. திருப்பி போட்டு 4-5 நொடிகளிள் எடுத்து விட வேண்டும்...
  10. ஜாலர் ரெடி!!!
  11. ஸ்டஃப்பிங் செய்முறை ::
  12. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்... வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...
  13. பிறகு தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்... கேரட் சேர்த்து வதக்கவும்...
  14. பிறகு மிளகாய் தூள் ஜீரக தூள் கரம் மசாலா கறி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்... கலவை நன்றாக வதங்கி எண்ணெய் பிறிந்த பின் அடுப்பை அணைக்கவும்...
  15. மூன்று ஜாலர்களை அடுக்கி நடுவில் மசாலா வைத்து முக்கோண வடிவில் அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவில் மடித்து கொள்ளவும்...
  16. பிறகு அதை தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றவும்...
  17. 2 முட்டையை நன்றாக கலக்கி வைத்துக்கொண்டு இரண்டு பக்கமும் தடவவும்..
  18. நன்றாக வெந்து பொன்னிம் ஆன பின் எடுக்கவும்...
  19. மிகவும் சுவையான ஜாலர் முர்த்தபா தயார்...!!!
  20. இது விருந்துகளுக்கு மிகவும் ஏற்ற மிகவும் ருசியான உணவாகும்!!!
  21. உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்!!!:thumbsup::thumbsup::thumbsup:
  22. முர்த்தபாவிற்கு மேலும் சுவையூட்ட 250கிராம் மட்டன் கீமாவை உப்பு மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவைத்து ஸ்ட்ஃப்பிங் மசாலாவில் சேர்க்கலாம்...
  23. பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியும் சேர்க்லாம்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE