Home / Recipes / Jackfruit Seeds Kuzhambu

Photo of Jackfruit Seeds Kuzhambu by Hema Shakthi at BetterButter
925
5
0.0(0)
0

Jackfruit Seeds Kuzhambu

Dec-20-2017
Hema Shakthi
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பலாக்கொட்டை - 15
  2. பெரிய வெங்காயம் - 1
  3. புளி - எலுமிச்சை அளவு
  4. நல்லெண்ணெய் - 2 மேசை கரண்டி
  5. கடுகு - 1 தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. வெந்தயம் - கால் தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - ஒரு கையளவு
  10. பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு
  12. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

Instructions

  1. பலாக்கொட்டை இளசாக இருந்தால் தோலை சீவி விட்டு இரண்டாக நறுக்கவும். இல்லையென்றால் ப்ரௌன் குக்கரில் வேகவைத்து, ஆறவைத்து, பின் தோலுரித்து, இரண்டாக நறுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் புளியை ஊறவைக்கவும்.
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகை போடவும். கடுகு பொரிந்ததும், உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர் வெந்தயம் மற்றும் பெருங்காயத்தை போட்டு அரை நிமிடம் வறுக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. இப்பொழுது வேகவைத்த பலாக்கொட்டை, புளி, சாம்பார் பொடி, உப்பு இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
  7. குழம்பு கெட்டியானதும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  8. இந்த குழம்பு சூடான சாதத்துடன் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE