Home / Recipes / Dried Turkey Berry Gravey

Photo of Dried Turkey Berry Gravey by Banupriya Jawahar at BetterButter
353
3
0.0(0)
0

Dried Turkey Berry Gravey

Dec-21-2017
Banupriya Jawahar
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சுண்டவத்தல் 10 - 15
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. தக்காளி 1
  4. பூண்டு 10 பல்
  5. புளி 1 நெல்லிக்காய் அளவு
  6. மண்டைவெல்லம் 1 சிறு துண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. வறுத்து அரைக்க:
  9. மல்லி விதை 1 மேஜைக்கரண்டி
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல் 5
  12. மிளகு 1/4 தேக்கரண்டி
  13. தாளிக்க:
  14. கடுகு 1/2 தேக்கரண்டி
  15. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  16. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  17. சுக்குப்பொடி 1 சிட்டிகை
  18. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  19. கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  20. நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் மல்லி விதை, சீரகம்,மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  2. அதே வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சுண்டவத்தலை வறுத்து, அதையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  3. அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய் முழுவதையும் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, அ.உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. சுக்குப்பொடி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பொடித்த சுண்டவத்தல், பொடி செய்த சீரகம், மல்லி, வற்றல், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. புளிக் கரைசலைசேர்த்து கொதிக்க விடவும்.
  8. ஒரு சிறிய துண்டு மண்டை வெல்லம் சேர்க்கவும்
  9. குழம்பு கொதித்து, வற்றி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  10. சுவையான சுண்டவத்தல் குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE