Home / Recipes / Black night shade berry gravy

Photo of Black night shade berry gravy by Subashini Krish at BetterButter
513
4
0.0(0)
0

Black night shade berry gravy

Dec-21-2017
Subashini Krish
60 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சை மணத்தக்காளி காய் 1/2 கப்
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி 1
  4. பூண்டு 10 பல்
  5. தேங்காய் பால் 1 கப்
  6. துருவிய தேங்காய் 1 தேக்கரண்டி
  7. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  11. சோம்பு 1/2 ஸ்பூன்
  12. மிளகு 1/2 ஸ்பூன்
  13. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  14. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
  15. கறிவேப்பிலை சிறிது
  16. நல்லெண்ணெய் 50 மில்லி
  17. புளி - நெல்லிக்காய் அளவு
  18. உப்பு தேவையான அளவு
  19. மஞ்சள் தூள் 1/2 ,ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி சீரகம், வெந்தயம், கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம் 5,துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் கடுகு தாளித்து மிளகு, சோம்பு சேர்த்து பொரிந்ததும் ஒன்றிரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மணத்தக்காளி காய்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சாம்பார் பொடி, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  6. எண்ணெய் தெளிந்த பின் புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்
  7. குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  8. குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்
  9. சூடான சாதம்,இட்லி ,தோசையுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE