Home / Recipes / Goat liver gravy

Photo of Goat liver gravy by Asiya Omar at BetterButter
573
3
0.0(0)
0

Goat liver gravy

Dec-21-2017
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. முதலில் ஊற வைக்க,:-
  2. ஈரல் கலந்து வாங்கியது - 300 கிராம்
  3. தயிர் - 1 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. உப்பு - சிறிது.
  6. இனி சமைக்க தே.பொ:-
  7. நல்ல எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் -2
  10. மல்லி,கறிவேப்பிலை - சிறிது
  11. வெங்காயம் , தக்காளி - தலா 1
  12. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  14. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  15. சீரகம,சோம்புத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி
  16. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  17. மிளகுத்தூள் 2 -3 தேக்கரண்டி
  18. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் ஈரலை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. அத்துடன், இஞ்சி பூண்டு,தயிர் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும் தயிர் சேர்ப்பதால் கடுக்காது.
  3. வெங்காயம் தக்காளி கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
  4. கடாயில் அல்லது குக்கரில் எண்ணெய் சூடு செய்யவும். இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய்,மல்லி,கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. அத்துடன் வெங்காயம் தக்காளி அரைத்தது சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
  6. அனைத்து மசாலா வகைகளும் சேர்க்கவும்.ஈரல் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டவும்.உப்பு தேவைக்கு பார்த்து சேர்க்கவும்.3 விசில் வேக விடவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறந்து கிரேவி கெட்டியாக இருந்தால் சரி,குழம்பாக இருந்தால் சிறிது வற்ற வைக்கவும்.
  8. சுவையான ஆட்டு ஈரல் கிரேவி தயார்.
  9. ஈரல் பிரட்டுவதாய் இருந்தால் மிளகு,சீரகம்,மஞ்சப்பொடி மட்டும் சேர்த்தாலே போதும். பக்க உணவாக சாதத்துடன் பரிமாறலாம்.இந்தக் கிரேவியை சாதத்தில் போட்டுச் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE