Home / Recipes / Shahi Gobhi

Photo of Shahi Gobhi by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
440
4
0.0(0)
0

Shahi Gobhi

Dec-23-2017
Muthulakshmi Madhavakrishnan
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Simmering
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. 1 சிறிய காலிஃப்ளவர்
  2. 1/4 கப் பச்சை பட்டாணி
  3. 1 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/4 கப் கெட்டி தயிர்
  6. 1/2 டீஸ்பூன் கேஷ்மிரி மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 டேபிள் ஸ்பூன் பிரஷ் கிரீம்
  10. சிறிது கொத்தமல்லி இலை
  11. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  12. 1 பிரிஞ்சி இலை
  13. 1/2 டீஸ்பூன் சீரகம்
  14. உப்பு தேவையான அளவு
  15. அரைக்க
  16. 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  17. 1/2 டீஸ்பூன் சீரகம்
  18. 2 கிராம்பு
  19. 3 ஏலக்காய்
  20. 1 சிறிய துண்டு பட்டை
  21. 7 முந்திரி பருப்பு
  22. 1 வெங்காயம்
  23. சிறிது இஞ்சி
  24. 5 பூண்டு பற்கள்

Instructions

  1. காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டவும்.
  2. பச்சை பட்டாணியை நிறம் மாறாமல் வேகவைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி விதை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  4. வதக்கிய பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பவுலில்‌ மாற்றவும்.
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  6. வாணலியில் நெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  7. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அரைத்த மசாலாவை சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.
  9. அவை நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
  10. பின் கெட்டியான தயிரை ஒரு ஸ்பூனால் நன்கு அடித்து வதக்கிய விழுதோடு சேர்க்கவும்.
  11. கலவை நன்கு வதங்கியதும் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  12. பின் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
  13. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  14. காலிஃப்ளவரோடு‌ மசாலா நன்கு சேர்ந்ததும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  15. கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  16. பின் ஃபிரஷ் கிரீம் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  17. கிரேவியின் மேலே எண்ணெய் மிதக்கும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE