Home / Recipes / Broad Beans Kara kuzhambu

Photo of Broad Beans Kara kuzhambu by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
459
4
0.0(0)
0

Broad Beans Kara kuzhambu

Dec-25-2017
Muthulakshmi Madhavakrishnan
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 3/4 கப் பச்சை மொச்சை
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 15 பூண்டு பற்கள்
  5. பெரிய எலுமிச்சை அளவு புளி
  6. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  11. 1/2 டீஸ்பூன் கடுகு
  12. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. சிறிது கறிவேப்பிலை
  14. உப்பு தேவையான அளவு
  15. அரைக்க
  16. 6 மிளகாய் வற்றல்
  17. 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  18. 1 டேபிள் ஸ்பூன் தனியா
  19. 1 டீஸ்பூன் மிளகு
  20. 1 டீஸ்பூன் சீரகம்
  21. 1/4 கப் தேங்காய் துருவல்
  22. 1 வெங்காயம்
  23. 1 தக்காளி

Instructions

  1. புளியை 20 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்துக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
  3. பின் அதே‌ வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நிமிடங்கள் வதக்கவும்.
  4. அவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மற்றும் மொச்சை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அவை நன்கு வதங்கியதும் புளி கரைச்சலை சேர்க்கவும்.
  7. பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  8. மொச்சை நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  9. குழம்பு நன்கு‌ கொதித்ததும்சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். பின் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
  10. நன்கு 10 நிமிடங்கள் கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  11. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் குழம்பின் மேலே ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE