Home / Recipes / Prawn Gravy

Photo of Prawn Gravy by Asiya Omar at BetterButter
562
3
0.0(0)
0

Prawn Gravy

Dec-26-2017
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. இறால் ஒரு கிலோ வாங்கி உரித்தது
  2. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் -2
  4. பொடியாக நறுக்கிய தக்காளி -2
  5. பச்சை மிளகாய் நறுக்கியது -2
  6. மல்லி,கருவேப்பிலை நறுக்கியது சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது -1+1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  10. காஷ்மீரி மிளகாய்த்தூள்-1+1 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  12. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. சுத்தம் செய்து அலசி நீர் வடித்து வைத்த இறாலுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்,ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விடவும்.சூடானவுடன்,கருவேப்பிலை,ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்ட விழுது சேர்த்து . அடுத்து பிரட்டி வைத்த இறால் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றியவுடன் மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் ,சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.
  3. அதன் மீது ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், சீரகம்,சோம்புத்தூள் தலா அரை தேக்கரண்டி,கால் தேக்கரண்டி கரம் மசாலா சேர்க்கவும்.
  4. நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.எல்லாம் சேர்ந்து கூட்டு போல் கெட்டியாகி வரும்.எண்ணெய் மேலே வரும்.
  5. நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான இறால் கூட்டு தயார். விரும்பிய உணவுடன், பக்க உணவாகப் பயன்படுத்தவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE