Home / Recipes / Chicken Gravy

Photo of Chicken Gravy by Asiya Omar at BetterButter
247
5
0.0(0)
0

Chicken Gravy

Dec-28-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Bachelors
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. சிக்கன் துண்டுகள் - 800 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  3. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் -1
  5. பெரிய தக்காளி -1
  6. பச்சை மிளகாய் -3
  7. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  12. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  14. எண்ணெய் -3 -4 மேஜைக்கரண்டி
  15. உப்பு - சுவைக்கு.

Instructions

  1. சிக்கன் துண்டுகள் கழுவி சுத்தம் செய்து நீர் வடித்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன் இஞ்சி பூண்டு,கரம் மசாலா சேர்க்கவும்.
  3. அடுப்பைக் குறைத்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து சிக்கன் சேர்த்து பிரட்டவும்.
  4. உப்பு சுவைக்குச் சேர்க்கவும்.பிரட்டவும்.
  5. சிக்கன் மீது மற்ற மசாலா தூள்கள் சேர்க்கவும்.
  6. ஒரு சேர பிரட்டவும்.அத்துடன் கொர கொரவென சுற்றி எடுத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.பிரட்டவும்.மூடி வேக விடவும்.
  7. 10 நிமிடம் கழித்து திறக்கவும். சிக்கன் வெந்து வரும,நறுக்கிய மல்லி இலை சேர்த்து சுருள வதக்கவும்.
  8. வெங்காயம்,தக்காளி,மசாலா வாடை அடங்கி எண்ணெய் மேலே வரும்.பொடித்த மிளகு தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான சிக்கன் கூட்டு தயார். ரசம்,கெட்டி பருப்பு,சாம்பார்,தயிர், ப்ரைட் ரைஸ்,புளியோதரை,பிரியாணி,ஏன் சப்பாத்தியுடன் கூட பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE