Home / Recipes / Mutton breast bone salna

Photo of Mutton breast bone salna by Asiya Omar at BetterButter
485
3
0.0(0)
0

Mutton breast bone salna

Dec-28-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. நெஞ்செலும்புக் கறி - கால் கிலோ
  2. மொத்தமாக சேர்த்து அரைக்க:-
  3. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி குவியலாக
  4. வீட்டு குழம்பு மசாலா -1 மேஜைக்கரண்டி
  5. பூண்டு பற்கள் -5
  6. பெரிய வெங்காயம் பாதி
  7. சிறிய தக்காளி -1
  8. தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி
  9. கடைசியில்ப்சால்னாவில் தூவ:-
  10. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  11. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி.
  12. தாளிக்க:-
  13. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  14. நறுக்கிய வெங்காயம் - பாதி
  15. கருவேப்பிலை -2 இணுக்கு
  16. மிளகாய்த்தூள் -1/4 தேக்கரண்டி
  17. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. எலும்பை நன்கு கழுவி தண்ணீர் வடிக்கவும். அரைக்க சொன்னவறை அரைத்து எடுக்கவும்.
  2. எலும்புடன் கூடிய நெஞ்சுக்கறியை குக்கரில் சேர்த்து அரைத்த விழுது,5 கப் தண்ணீர்,உப்பு தேவைக்குச் சேர்க்கவும்.கொதிக்கட்டும்.
  3. கொதித்து வரும்.அடுப்பைக் குறைத்து வெயிட் போடவும்.
  4. கால் மணி நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும் ,கறி வெந்துவிட்டதா என்று பார்த்து,நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.சால்னா தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து,உப்பும் சரி பார்த்து கொதிக்க விடவும். மிளகுத்தூள்,கரம் மசாலா தூவவும்
  5. இனி தாளிக்க வேண்டும் .கடாயில் நல்ல எண்ணெய் சூடாக்கி வெங்காயம் பொன்னிறமாக வதக்கி,கருவேப்பிலை சேர்க்கவும்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  6. தாளிப்பை தயாராக கொதித்துக் கொண்டிருக்கும் நெஞ்செலும்பு சால்னாவில் சேர்க்கவும்.கலந்து விடவும்.
  7. சுவையான நெஞ்செலும்பு சால்னா தயார்.
  8. பக்க உணவாகப் பரிமாறவும்.
  9. சூடான சோறு,பொட்டுக்கடலைத் துவையல்,பொரியல் அப்பளம் என்று அசத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE