Home / Recipes / Prawn Masala ( Coconut added)

Photo of Prawn Masala ( Coconut added) by Asiya Omar at BetterButter
495
4
0.0(0)
0

Prawn Masala ( Coconut added)

Dec-29-2017
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. இறால் -1 கிலோ
  2. எண்ணெய் - 3- 4 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய வெங்காயம் பெரியது -2
  4. இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
  5. நறுக்கிய தக்காளி பெரியது -2
  6. நறுக்கிய பச்சை மிளகாய் -2
  7. மல்லி,கருவேப்பிலை - சிறிது
  8. இறாலுடன் பிரட்டி வைக்க:-
  9. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள்- கால் - அரை தேக்கரண்டி
  11. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  12. சீரகம்,சோம்புத்தூள் -தலா அரை தேக்கரண்டி
  13. கரம் மசாலா - கால் தேக்கரண்டி(ஏலம்,பட்டை கிராம்பு)
  14. பாதி எலுமிச்சைப் பழம்.
  15. உப்பு - சுவைக்கு.
  16. அரைக்க :-
  17. தேங்காய் கால் கப் + முந்திரி 2.

Instructions

  1. இறாலை தோல் எடுத்து தலை நீக்கி, அதில் இருக்கும் கருப்பை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.
  2. 1 கிலோ இறாலை உரித்தால் 600 கிராம் தான் வரும்.
  3. மேற்கூறிய படி மசாலாவில் பிரட்டி வைக்கவும்.
  4. பொடியாக வெங்காயம,மிளகாய், தக்காளி நறுக்கி வைக்கவும். தேங்காய் அரைத்து வைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம்,மிளகாய்,தக்காளி,உப்பு சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் மூடினால் கூட்டு போல் ஆகும்.
  6. அத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.
  7. நன்கு வெந்தவுடன் தேங்காய் சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கெட்டியாகி வரும் .நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
  8. இது வெறும் சோறு,ரசம் முதல் பிரியாணி,புலாவ்,சப்பாத்தி,ரொட்டி,ஆப்பம்உடன் கூட பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE