Home / Recipes / Snakegourd Milakoottal

Photo of Snakegourd Milakoottal by Ayesha Ziana at BetterButter
323
3
0.0(0)
0

Snakegourd Milakoottal

Dec-29-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Snakegourd Milakoottal RECIPE

புடலங்காய், பருப்பு, அரைத்த மிளகு கலவை வைத்து செய்த மிளகூட்டல். சாதத்திற்கு நல்ல சைட் டிஷ்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. புடலங்காய் தோல் சீவி பொடியாக நறுக்கியது 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. உப்பு தேவைக்கு
  4. மஞ்சள் தூள்
  5. தண்ணீர் தேவைக்கு
  6. வறுத்து அரைக்க: மிளகு 12
  7. தேங்காய் 1/2 கப்
  8. வற்றல் மிளகாய் 1
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் சிறிது
  11. தாளிக்க: எண்ணெய் சிறிது
  12. கடுகு 3/4 ஸ்பூன்
  13. பெருங்காயம் சிறிது
  14. உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்
  15. கறிவேப்பிலை 1 கொத்து

Instructions

  1. பாசிப்பருப்பை குக்கரில் 4 விசில் வரை வேக வைத்து மசிக்கவும்.
  2. ஒரு வாணலியில் புடலங்காயை மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  3. வறுத்து அரைக்க: ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் மிளகு, வற்றல் மிளகாய், சீரகம் சேர்த்து வறுத்து, பின்னர் தேங்காயும் சேர்த்து லேசாக கிளறி அடுப்பை அணைத்துவிடவும். இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து மை போல் அரைக்கவும்.
  4. மசித்த பாசிப்பருப்புடன் அரைத்த மசாலா, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் வெந்த புடலங்காயும் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  5. மற்றொரு பேனில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து கலவையில் கொட்டவும்.
  6. மிகவும் சுவையான மிளகூட்டல் தயார். இது சாதத்துடன் நல்ல காம்பினேஷன்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE