Home / Recipes / Kathirikkai Kuzhambu

Photo of Kathirikkai Kuzhambu by Surya Rajan at BetterButter
427
3
0.0(0)
0

Kathirikkai Kuzhambu

Dec-31-2017
Surya Rajan
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கத்தரிக்காய்  : 3
  2. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 10
  5. பூண்டு : 10 பல்
  6. தக்காளி : 1
  7. மிளகாய் : 2
  8. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  9. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  10. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  11. புளி : நெல்லி அளவு
  12. அரைக்க : (தேங்காய் விழுது )
  13. தேங்காய் : 1 கையளவு
  14. சின்ன வெங்காயம் : 5
  15. தாளிக்க :
  16. கடுகு : 1/2 மேஜைக்கரண்டி
  17. சின்ன வெங்காயம் : 2
  18. கருவேப்பிலை : சிறிதளவு
  19. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

Instructions

  1. கத்தரிக்காயை  நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும்  
  2. ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வதக்கி தனியே வைக்கவும்
  3. மற்றொரு  பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பூண்டு, வெங்காயம், சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் . பின் தக்காளி , மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சீரக தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வதக்கிய கத்தரிக்காய் , அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE