Home / Recipes / Channa masala

Photo of Channa masala by Asiya Omar at BetterButter
431
7
0.0(0)
0

Channa masala

Jan-01-2018
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. கால் கிலோ வெள்ளை கொண்டைக்கடலை ஊற வைத்தது.
  2. சன்னா மசாலா- 2 தேக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி
  4. சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
  5. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் -2
  8. நறுக்கிய வெங்காயம் -3
  9. நறுக்கிய தக்காளி -3
  10. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  11. எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  12. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவிட்டு நீர் வடிகட்டி வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து இஞ்சி பூண்டு,கரம் மசாலா ,சோம்புத்தூள் சேர்க்கவும்.நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டவும்.
  4. சிறிது உப்பு சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கி வரும்.
  5. ஊறிய கொண்டைகடலை சேர்த்து, சன்னா மசாலா சேர்க்கவும்.
  6. சன்னா மூழ்கும் அளவு தண்ணீர் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  7. 5 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  8. ஆவியடங்கியவுடன் திறந்து 4 மேஜைக்கரண்டி வெந்த சன்னாவை தனியாக எடுத்து நன்றாக மசித்து ( அல்லது மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்தும் எடுக்கலாம்)
  9. அரைத்ததை குக்கரில் வெந்த சன்னா மசாலாவில் சேர்க்கவும்.கொதிக்க விடவும்.
  10. ஒன்று சேர்ந்து கெட்டியாகி வரும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
  11. சுவையான சன்னா மசாலா தயார். இதனை ப்ரெட் டோஸ்டுடன் பரிமாறவும்.
  12. செமையாக இருக்கும்.வாரம் ஒரு முறை நிச்சயம் எங்க வீட்டில் இந்த டிபன் இருக்கும்.சன்னா மசாலாவுடன் நறுக்கிய வெங்காயம் மேலே தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE