Home / Recipes / Idly puli pongal

Photo of Idly puli pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
858
7
0.0(0)
0

Idly puli pongal

Jan-05-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Idly puli pongal RECIPE

இது மிகவும் எளிதான மீதமாகும் இட்லி மற்றும் குழந்தைகளூக்காக வேக வைத்த பருப்பின் மீதி சேர்த்து செய்யப்படும் பொங்கல் . அவசரத்திற்கு உதவும் வித்தியாசமான டிபன் வெரைட்டி. எப்போதும் மீதான இட்லியை உப்புமா செய்வதற்கு பதில் இந்த இட்லி புளி பொங்கல் செய்து பாருங்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 2

  1. இட்லி - 3
  2. வேக வைத்த பாசிபருப்பு /துவரம்பருப்பு - 2 மேஜைகரண்டி
  3. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  4. தனியாபொடி-1/4தேக்கரண்டி
  5. காரப்பொடி - 2 சிட்டிகை
  6. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  8. வெல்லம் - 2 சிட்டிகை
  9. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  11. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. வறுத்த வேர்கடலை - 1 மேஜைகரண்டி
  13. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  14. மிளகாய்வத்தல்-3
  15. பெருங்காயம் - 2 சிட்டிகை
  16. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  17. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

Instructions

  1. இட்லியை உதுத்துக்கொள்ளவும். புளியை ஊறவைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. மஞ்சள் பொடி தனியா பொடி காரப்பொடி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. புளி கரைத்து விட்டு வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. பருப்பு மற்றும் இட்லி உதுத்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. இட்லி புளி பொங்கல் தயார் . ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பறிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE