Home / Recipes / Coconut Veg Sambar

Photo of Coconut Veg Sambar by Asiya Omar at BetterButter
352
7
0.0(0)
0

Coconut Veg Sambar

Jan-06-2018
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. துவரம் பருப்பு -100-150 கிராம்
  2. காய்கறிகள் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய்,முருங்கைக்காய்-1/4 கிலோ
  3. சின்ன வெங்காயம் -100 கிராம்
  4. தக்காளி -100 கிராம்
  5. கீறிய பச்சை மிளகாய் -2
  6. நறுக்கிய மல்லி இலை.
  7. புளி ஊற வைக்க -சிறிய எலுமிச்சை அளவு புளி
  8. சாம்பார் பொடி -3-4 தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.
  10. அரைக்க: தேங்காய் - 3 -4 மேஜைக்கரண்டி
  11. தாளிக்க :-
  12. எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
  13. மேலே விட நெய் -1 தேக்கரண்டி
  14. கடுகு,வெந்தயம் - தலா1/2 தேக்கரண்டி
  15. கிள்ளிய வற்றல்-1
  16. பெருங்காயப் பொடி -2 பின்ச்
  17. கறிவேப்பிலை -2இணுக்கு.

Instructions

  1. பருப்பை ஊற வைக்கவும்.வெங்காயம் ,தக்காளி,காய்கறிகள் நறுக்கி வைக்கவும்.புளி ஊற வைக்கவும்.
  2. குக்கரில் மஞ்சள் தூள் தேவைக்கு பருப்பிற்கு மேல் ஒரு இஞ்ச் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  3. பாத்திரத்தில் காய்கறிகள்,வெங்காயம், தக்காளி,உப்பு ,சாம்பார் பொடி சேர்த்து வேக வைக்கவும்.காய் வெந்ததும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
  4. வெந்த பருப்புடன் வேக வைத்த காய்கறிகள் சேர்க்கவும்.அரைத்த தேங்காய் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.கலந்து விட்டு கொதிக்கட்டும்.
  5. தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் விடவும்,கடுகு,வெந்தயம்,கிள்ளிய வற்றல்,கருவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.மேலே மணத்திற்கு நெய் விடவும்.நன்கு கலந்து விடவும்.
  6. சுவையான தேங்காயிட்ட காய்கறி சாம்பார் தயார்.பொங்கல, ்இட்லி,சாம்பார்,வடை,சட்னியுடன் அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE