Home / Recipes / Rice coconut payasam

Photo of Rice coconut payasam by Adhi Venkat at BetterButter
514
9
0.0(0)
0

Rice coconut payasam

Jan-07-2018
Adhi Venkat
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சரிசி – 50 கிராம்
  2. தேங்காய் – ஒரு மூடி
  3. வெல்லம் – 150 கிராம்
  4. ஏலக்காய் – நான்கு
  5. காய்ச்சிய பால் – அரை லிட்டர்.
  6. முந்திரி, திராட்சை – சிறிதளவு
  7. நெய் – ஒரு ஸ்பூன்

Instructions

  1. அரிசியை நன்கு அலசி அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. தேங்காயை துருவி ஏலக்காயுடன் மிக்சியில் நன்கு  அரைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் ஊறியஅரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  4. அடி கனமான பாத்திரத்தில் அரைத்த அரிசி,  தேங்காய்,ஏலக்காய் விழுதைச்  சேர்த்துக் கூடத்தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் கை விடாமல் கிளறிக்கொண்டே  இருக்கவும்.
  5. சிறிது கவனமில்லாமல் விட்டு  விட்டால் கட்டிதட்டி விடும். அரிசி  நன்கு வேகவேண்டும்.
  6. பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம்  கரைந்ததும் வடிகட்டி அரிசி தேங்காய் கலவையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.  வெல்லத்துடன் சேர்ந்து நன்கு வெந்து விட்டது என்று  தெரிந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம்.
  8. ஒரு வாணலியில் நெய்யை விட்டு  முந்திரி,திராட்சையை வறுத்து  பாயசத்தில் சேர்க்கவும். காய்ச்சிய பாலை தேவையான அளவு  சேர்த்துக்கொள்ளலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE