Home / Recipes / Cherry Tomato Thokku

Photo of Cherry Tomato Thokku by Priyadharshini Selvam at BetterButter
534
8
0.0(0)
0

Cherry Tomato Thokku

Feb-08-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cherry Tomato Thokku RECIPE

நீயென்ன பெரிய தக்காளி தொக்கா? இல்லை இல்லை நான் சின்ன தக்காளி தொக்கு தான் ! சாதாரண தக்காளிகளை விட செர்ரி தக்காளி ருசியாகவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும் எப்போதும் செய்யும் தொக்கைவிட சுவையான தக்காளி தொக்கை சுவைக்க இந்த செர்ரி தக்காளி தொக்கை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் எளிதான செய்முறை தான். இதோ செர்ரி தக்காளி தொக்கு ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Accompaniment

Ingredients Serving: 2

  1. செர்ரி தக்காளி 250 கிராம்
  2. கடுகு 1/2 தேக்கரண்டி
  3. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  4. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் சிறிதளவு
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. கொத்துமல்லி இலை சிறிதளவு

Instructions

  1. ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு , கடலைப்பருப்பு , பெருங்காயம் , கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். .
  2. இதனுடன் நறுக்கிய செர்ரி தக்காளிகளை சேர்க்கவும்.
  3. நன்கு வதங்கியதும் , உப்பு , மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சமைக்கவும்.
  4. தண்ணீர் சேர்க்கவேண்டாம். நன்றாக வெந்தபின் நறுக்கிய கொத்துமல்லி இலைகளை சேர்த்து இரக்கவும்.
  5. தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இரக்கலாம்
  6. மஞ்சத்தூள் சேர்க்க வேண்டாம் நிறம் மாறிவிடும்
  7. சுவையான செர்ரி தக்காளி தொக்கு ரெடி. இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE