Home / Recipes / Karunaikilangu pulikulambu

Photo of Karunaikilangu pulikulambu by விருதை சமையல் at BetterButter
648
8
0.0(0)
0

Karunaikilangu pulikulambu

Feb-15-2018
விருதை சமையல்
1800 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Karunaikilangu pulikulambu RECIPE

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. கருணைக்கிழங்கு - 1/4 கிலோ கடுகு - தாளிக்க
  2. சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
  3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  4. புளி - எலுமிச்சை அளவு
  5. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. அரைக்க:
  11. சின்ன வெங்காயம் - 8
  12. சீரகம் - 2 தேக்கரண்டி
  13. காய்ந்த மிளகாய் - 7

Instructions

  1. கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 2 விசில் வரும்வரை அவிக்கவும். தோலை நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம்,  சீரகம், காய்ந்த மிளகாய்  ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  4. கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் பொடி, புளிக்கரைசல், மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.
  7. பின் அதில் கருணைக்கிழங்கு சேர்த்து  நன்கு வெந்ததும்  தேவையான  உப்பு சேர்த்து குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரிந்து வரும் போது இறக்கவும்.
  8. சுவையான சத்தான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE