Home / Recipes / Plantain flower steamed dumpling gravy

Photo of Plantain flower steamed dumpling gravy by Ashwini Rajendran at BetterButter
642
5
0.0(0)
0

Plantain flower steamed dumpling gravy

Feb-16-2018
Ashwini Rajendran
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Plantain flower steamed dumpling gravy RECIPE

வாழைப்பூ எவ்வாறு சமைத்துச் சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வாழைப்பூவில் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த செய்முறையை பகிர்ந்த என் நண்பருக்கு நன்றி.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Others
  • South Indian
  • Simmering
  • Steaming
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருண்டை தயாரிக்க:
  2. வாழைப்பூ நறுக்கியது 2 கின்னம்
  3. கடலை பருப்பு 200 கிராம்
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் 1
  7. சோம்பு 1 மேசைக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. அரைக்க:
  10. தேங்காய் துருவியது 1 கையளவு
  11. வெங்காயம் 1
  12. மிளகு 2 மேசைக்கரண்டி
  13. முந்திரி பருப்பு 10
  14. குழம்பு தயாரிக்க:
  15. சின்ன வெங்காயம் 10
  16. பூண்டு தோல் நீக்கியது 10 பல்
  17. மிளகாய் தூள் 2 மேசைக்கரண்டி
  18. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  19. உப்பு தேவையான அளவு
  20. தண்ணீர் தேவையான அளவு
  21. எண்ணெய் 3 மேசைக்கரண்டி
  22. கறிவேப்பிலை 1 கொத்து

Instructions

  1. உருண்டை தயாரிக்கும் முறை:
  2. கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்து தண்ணீர் வடித்து விட வேண்டும்.
  3. ஒரு மிக்ஸியில் சோம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. அரைத்த கடலை பருப்பை ஒரு கின்னத்தில் மாற்றவும்.
  5. அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பிசையவும்.
  6. பிசைந்த மாவை சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  7. உருட்டிய உருண்டைகளை 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  8. உருண்டை தயார்.
  9. அடுத்து அரைக்க கொடுக்கப்பட்ட தேங்காய், வெங்காயம், மிளகு, முந்திரி, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  10. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
  11. அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  12. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும்.
  13. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிய தீயில் கொதிக்க விடவும்.
  14. பச்சை வாசனை போன பின் வேக வைத்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் சிறிய தீயில் கொதிக்க விடவும்.
  15. 5 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும்.
  16. குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE