Home / Recipes / Ratatouille with a twist

Photo of Ratatouille with a twist by Priyadharshini Selvam at BetterButter
695
7
0.0(0)
0

Ratatouille with a twist

Feb-17-2018
Priyadharshini Selvam
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ratatouille with a twist RECIPE

காய்கறிகள் வைத்து செய்யும் உணவுவகைகள் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இந்த ராட்டடூயில் தான். பிரெஞ்ச் நாட்டு உணவான இதை நம்ம ஊருக்கேற்றாற்போல் திருத்தி ஒரு ரெசிபி செய்திருக்கிறேன் இதோ.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Main Dish

Ingredients Serving: 6

  1. வெங்காயம் 3
  2. தக்காளி 2
  3. உருளைக்கிழங்கு 4
  4. வெள்ளரிக்காய் 1
  5. வெள்ளரிபழம் 1
  6. சர்க்கரைவள்ளி கிழங்கு 2
  7. குண்டு கத்திரிக்காய் 2
  8. பச்சை ஆப்பிள் 2
  9. காளான் 4
  10. பேபி கார்ன் 1
  11. அரிசி சாதம் 1 கப்
  12. நெய்/ உருக்கிய வெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
  15. மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
  16. பூண்டு போடி 1 தேக்கரண்டி
  17. மிக்ஸட் ஹேர்ப்ஸ் 2 தேக்கரண்டி
  18. சில்லி பிளேக்ஸ் 2 தேக்கரண்டி
  19. துருவிய சீஸ் 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், பூண்டு பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  2. நன்கு குலைந்த சாதம் எடுத்துக்கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து மசித்து வைக்கவும்.
  3. காய்கறிகள் அனைத்தையும் வட்ட வட்டமாக வெட்டி கொள்ளுங்கள்.
  4. ஒரு பேக்கிங் பானில் நெய்/ உருக்கிய வெண்ணெய் தடவி வைக்கவும். அவனை 170 ℃ முற்சூடு செய்யவும். குக்கர் என்றால் 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.
  5. நெய் தடவிய பானில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை நன்கு பரப்பவும். இதன் மேல் வட்டமாக வெட்டிய தக்காளியை வைத்து பரப்பவும்.
  6. இதன் மேல் மசித்த சாதத்தை வைத்து நன்கு அழுத்தி பரப்பவும்.
  7. இதன் மேல் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் தூவவும்.
  8. இப்போது வெட்டி வைத்த மற்ற காய்களை அழகாக ஒன்றின் மேல் ஒன்று படும்படி வட்டமாக பரப்பவும்.
  9. இதன் நடுவில் காளான் மற்றும் பேபி கார்ன் வைக்கவும்.
  10. இதன் மேல் துருவிய சீஸ் தூவி , அதன் மேல் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்ட் ஹேர்ப்ஸ் தூவவும்.
  11. சுற்றிலும் நெய் ஊற்றி, 30 நிமிடம் அவனில் 170 ℃ இல் வைத்து சமைக்கவும்
  12. குக்கர் என்றால் மேலே துருவிய சீஸ் உருகி காய்கள் லேசாக நிறம் மாறும்வரை சமைக்கவும். இதற்கு 40 நிமிடங்கள் ஆகும்.
  13. சுவையான ராட்டடூயில் வித் அ ட்விஸ்ட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE