Home / Recipes / Pacha sundaikai sambar

Photo of Pacha sundaikai sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
458
6
0.0(0)
0

Pacha sundaikai sambar

Feb-17-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pacha sundaikai sambar RECIPE

சுண்டைக்காய் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமானது. இதில் உள்ள கசப்பு தன்மை நம் உடலில் உள்ள தேவையில்லா பாக்டீரியாக்களை அழிக்க உதவும். சாம்பாராக செய்யும் போது கசப்புதன்மை அவ்வளவாக தெரியாது.குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்ச சுண்டைக்காய் -1/4 கப் (விருப்பப்பட்டால் அரை கப் வரை எடுத்துக்கொள்ளலாம்)
  2. சின்ன வெங்காயம் -5
  3. தக்காளி- 1
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  6. புளி -1நெல்லிக்காய்அளவு
  7. தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  9. வறுத்து அரைக்க
  10. கடலைப் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  11. கொத்தமல்லி விதை-1 மேஜைக்கரண்டி
  12. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  13. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  14. மிளகாய் -6 முதல் 8
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  16. தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய்-2 டிராப்ஸ்
  17. தாளிக்க
  18. தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
  19. கடுகு -1 தேக்கரண்டி
  20. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  21. மிளகாய் வத்தல் -1
  22. பெருங்காயம் -2 சிட்டிகை

Instructions

  1. வறுக்க கொடுத்தவற்றை (தேங்காய் துருவல் கருவேப்பிலை தவிர)வறுக்கவும்
  2. தேங்காய் துருவல் கருவேப்பிலை வறுக்கவும்
  3. எல்லாம் சேர்த்து ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  5. பருப்பை குக்கரில் குழைய வேக விடவும்
  6. பச்ச சுண்டைக்காயை நன்றாக அலம்பி கத்தியால் பாதி நறுக்கிக்கொள்ளவும். மிகவும் பொடி யாக இருந்தால் தேங்காய் அல்லது கல்லால் தட்டிக்கொள்ளவும்
  7. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சுண்டைக்காயை நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  8. தனியாக எடுத்து அதில் உப்பு மஞ்சள் பொடி போட்டு புளியை கரைத்து சேர்த்து குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் வேக வைக்கவும்
  9. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
  10. பச்ச வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  11. வேகவைத்த சுண்டைக்காயை அப்படியே சேர்க்கவும்
  12. ஒரு கொதி வந்தவுடன் திரித்ததை சேர்க்கவும்
  13. மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்
  14. எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE