Home / Recipes / Drumstick தால்

Photo of Drumstick தால் by Asiya Omar at BetterButter
294
5
0.0(0)
0

Drumstick தால்

Feb-20-2018
Asiya Omar
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு -100 -150 கிராம்
  2. முருங்கைக்காய் -2
  3. வெங்காயம்-100 கிராம்
  4. தக்காளி -100 கிராம்
  5. மிளகாய்-2
  6. மல்லி இலை -சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
  10. சீரகத்தூள்-கால் தேக்கரண்டி
  11. உப்பு -தேவைக்கு.
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  14. நெய் -1 தேக்கரண்டி
  15. கடுகு-1/2 தேக்கரண்டி
  16. மிளகாய்வற்றல்-2
  17. கருவேப்பிலை-2 இணுக்கு.
  18. நறுக்கிய வெங்காயம்-1 மேஜைக்கரண்டி.

Instructions

  1. பருப்பை அலசி அரை மணி நேரம் ஊற விடவும்.குக்கரில் தேவைக்கு தண்ணீர் வைத்து ஊற வைத்த பருப்பு பருப்பு,வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மசாலாதூள் வகைகள்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  2. தண்ணீர் பருப்பு மூழ்கும் அளவு,ஒருகப் கூட இருக்கலாம்.குக்கரை மூடி3 விசில் வேக வைக்கவும். முருங்கைக்காய் விரல் அளவு துண்டாக போட்டு வைக்கவும்.
  3. ஆவியடங்கியவுடன் குக்கரை திறந்தால் வீடே மணக்கும்.
  4. அதனுடன் நறுக்கிய முங்கைக்காய்,உப்பு சேர்த்து மீண்டும் ஒரு விசில் வைக்கவும்.
  5. குக்கரை திறந்தால் பருப்பும்,முருங்கையும் பக்குவமாக வெந்து இருக்கும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  6. தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விடவும்,கடுகு,வற்றல்,கருவேப்பிலை,சிறிது வெங்காயம் பொன்னிறமாக வறுத்து பருப்பு முருங்கைக்காயில் சேர்க்கவும்.
  7. கம கமக்கும் சுவையான பருப்பு முருங்கைக்காய் தயார்.ரசம்,மோர்,அப்பளம்,துவையலுடன் பரிமாறலாம்.சப்பாத்திக்கும் சூப்பர்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE