Home / Recipes / Keerai Masiyal

Photo of Keerai Masiyal by Krishnasamy Vidya Valli at BetterButter
769
4
0.0(0)
0

Keerai Masiyal

Feb-20-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Keerai Masiyal RECIPE

கீரையில் நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து அதிகம் உள்ளது. பெண்களுக்கு தினமும் கீரை சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்றாக கருகருவென வளரும். கீரையின் இரும்பு சத்தை ரீடெய்ன் செய்வதற்காக இரண்டு சிட்டிகை சுண்ணாம்பு சேர்க்ப்படுகிறது.ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தாளிக்க மட்டுமே எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரைக்கீரை/தண்டு கீரை -1 கட்டு
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  4. சுண்ணாம்பு -2 சிட்டிகை
  5. தாளிக்க
  6. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  7. கடுகு -1 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. பெருங்காயம் -2 சிட்டிகை
  11. கருவடகம்/கீரை வடகம் -8 (விருப்பப்பட்டால்)

Instructions

  1. கீரையை நன்றாக அலம்பி நறுக்கிக்கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டி பெருங்காயம் போட்டு மூடாமல் வேக விடவும்
  3. பாதி வேகும்போதே சுண்ணாம்பு மற்றும் உப்பு சேர்க்கவும். கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். கடுப்புதன்மையும் தெரியாது.
  4. நல்ல கீரையாக இருந்தால் கரண்டியால் மசித்தாலே போதுமானது.தேவைப்பட்டால் கீரை மத்தால் மசித்துக்கொள்ளவும்.
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. தாளித்ததை சேர்த்து பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE