Home / Recipes / Raw mango pachadi

Photo of Raw mango pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
415
3
0.0(0)
0

Raw mango pachadi

Feb-21-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raw mango pachadi RECIPE

சித்திரை வருடப்பிறப்பிற்கு கட்டாயம் செய்யப்படுவது இந்த மாங்காய் பச்சடி. இது உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் இப்படி எல்லாம் கலந்த சுவையில் இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 3

  1. நறுக்கிய மாங்காய் துண்டுகள் -15 முதல் 20
  2. வெல்லம் -1/2 கப்
  3. ஏலக்காய் பொடி -4 சிட்டிகை
  4. உப்பு -1/4 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நெய் -1 தேக்கரண்டி
  8. கடுகு -1/2 தேக்கரண்டி
  9. வேப்பம் பூ (டிரை) - 2 தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் -1
  11. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. மாங்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். குழையாமல் வேக விரும்புபவர்கள் நேரடியாகவும் பாத்திரத்தில் வேக வைக்கலாம்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தனியாக எடுத்து வைக்கவும்
  4. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கரைய விடவும். விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்.
  5. வெல்லம் நன்றாக கொதித்து பச்ச வாசனை போனவுடன் வேகவைத்த மாங்காய் சேர்க்கவும்
  6. நன்றாக கிளறி கெட்டியானதும் ஏலப்பொடி தூவி இறக்கி தாளித்ததை கலந்து பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE