Home / Recipes / Tri veggies coconut milk jalfrezi

Photo of Tri veggies coconut milk jalfrezi by Adaikkammai Annamalai at BetterButter
426
8
0.0(0)
0

Tri veggies coconut milk jalfrezi

Feb-21-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tri veggies coconut milk jalfrezi RECIPE

இது மிகவும் சுவையான சைனீஸ் சைடு டிஷ் .., இது வெள்ளை சாதம் மற்றும் புலாவ் வகைகளுக்கு சிறந்தது.., சப்பாத்தி கூட சுவையாக இருக்கும் இது முழுக்க முழுக்க தேங்காய் பாலிலே கொதிக்கும் கொஞ்சம் கூட எண்ணெய் இல்லாதது தாளிக்காதது சத்தான சுவையான மூவகை காயினால் ஆன தேங்காய் பால் ஜல்ஃபிரெசி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Chinese
  • Pressure Cook
  • Steaming
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சுரைக்காய் - 1/2 காய்
  2. பீன்ஸ் - (7 - 8 )
  3. உருளை கிழங்கு - 2
  4. வெங்காயம் - 2
  5. கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
  6. மஞ்சத்தூள் - 2 ஸ்பூன்
  7. உப்பு - சிறிது
  8. பச்சை மிளகாய் - 4

Instructions

  1. மேலே சொல்ல பட்ட காய்கறி களை சுத்தம் செய்து அலசி நறுக்கி எடுத்து கொள்ளவும் வெங்காயத்துடன்
  2. தேங்காய் பாலுக்கு அரை மூடி தேங்காயை எடுத்து துருவி அதை மிக்ஸ்யில் அரைத்து கெட்டியாக தண்ணி அதிகமாக விடாமல் கெட்டியாக முதல் பால் எடுத்துக்கொள்ளவும் .., பின் அதில் தண்ணி சேர்த்து இரண்டாவது பால் புளிந்து எடுக்கவும்.. இது போல் மூன்று தடவை பால் எடுத்துக்கொள்ளவும்..
  3. பின் வெங்காயம் ,சுரைக்காய், பீன்ஸ், உருளை மூன்றையும் குக்கரில் சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் முதல் இரண்டு தேங்காய் பால் சேர்க்கவும் குக்கரில்
  4. பின் குக்கரை மூடி வைத்து 2 விசில் 5 நிமிடம் வைக்கவும்
  5. முடிந்தவுடன் திறந்து மஞ்சத்தூள் 1 ஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  6. நன்றாக கொதிக்கவுடவும் கிளறி விடவும்
  7. கடைசியாக எடுக்க பட்ட கடைசி தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் 15 நிமிடம்
  8. கொதித்த பின் உப்பு பார்த்து இறக்கவும்
  9. சுவையான சுலபமாபான சீக்கிரத்தில் செய்யகூடிய சைனீஸ் மூவகை காய்கறி தேங்காய் பால் ஜல்ஃபிரெசி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE