Home / Recipes / Drumstick poricha kootu

Photo of Drumstick poricha kootu by Adhi Venkat at BetterButter
1057
2
0.0(0)
0

Drumstick poricha kootu

Feb-25-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 5

  1. முருங்கைக்காய் - 3 (நடுத்தர அளவில்)
  2. துவரம்பருப்பு - 1/2 கப்
  3. பயத்தம்பருப்பு - 1/4 கப்
  4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. வரமிளகாய் - 3
  7. மிளகு - 1 தேக்கரண்டி
  8. பெருங்காயம் - சிறிதளவு
  9. தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தாளிக்க
  12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. குக்கரில் துவரம்பருப்பையும், பயத்தம்பருப்பையும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.
  2. முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும்.
  3. தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் காயை வேகவிடவும்.
  4. அதனுடன் சிறிதளவு உப்பும் மஞ்சள்தூளும் சேர்க்கவும்.
  5. ஒரு வாணலியில் உளுத்தம்பருப்பு, வரமிளகாய், மிளகு, பெருங்காயத்தை சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  6. ஆறியவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  7. முருங்கைக்காய் வெந்ததும் அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  8. கொதித்ததும் வெந்த பருப்பை மசித்து சேர்க்கவும்.
  9. உடன் வேண்டிய அளவு தண்ணீரும் உப்பும் சேர்க்கவும்.
  10. ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
  11. வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
  12. சுவையான முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE