Home / Recipes / Brinjal Pachadi

Photo of Brinjal Pachadi by Yasmin Shabira at BetterButter
471
3
0.0(0)
0

Brinjal Pachadi

Feb-27-2018
Yasmin Shabira
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal Pachadi RECIPE

பிரியாணிக்கு மிக சிறந்த சைட்டிஷ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கத்தரிக்காய் - 2
  2. வெங்காயம் - 3
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  5. பட்டை - ஒரு துண்டு
  6. க்ராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்தூள் - 1 மேசைக்கரண்டி
  10. ஜீரகதூள் - 1தேக்கரண்டி
  11. மல்லிதூள் -1தேக்கரண்டி
  12. புளி - ஒரு எலுமிச்சை அளவு
  13. உப்பு - தே.அளவு
  14. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  15. அரைப்பதற்கு:::
  16. முழு மிளகு,வெள்ளை எள்ளு,வேர்க்கடலை - தலா அரை தேக்கரண்டி

Instructions

  1. முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ளவற்றை நன்றாக வாசம் வரும் வரை வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்...
  2. புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்..
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, க்ராம்பு, ஏலக்காய் மற்றும் கடுகு சேர்க்கவும்...
  4. கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்...
  5. வெங்காயம் வதங்கிய பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
  6. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்...
  7. பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், ஜீரகதூள்,மல்லிதூள்,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி 2 - 3 நிமிடம் வெந்த பின் கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கிளறி அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்...
  8. கத்தரிக்காய் நன்றாக மசிந்த பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி மேலும் 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்...
  9. சுவையான பிரியாணிக்கு ஏற்ற கத்தரிக்காய் பச்சடி தயார்!!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE