Home / Recipes / Tricolour tandoori grilled chicken

Photo of Tricolour tandoori  grilled chicken by Asiya Omar at BetterButter
570
5
0.0(0)
0

Tricolour tandoori grilled chicken

Feb-28-2018
Asiya Omar
240 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tricolour tandoori grilled chicken RECIPE

மூன்று சுவையில் மூவர்ணத்தில் பார்ட்டிகளில் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Grilling
  • Healthy

Ingredients Serving: 3

  1. முழு கால் பகுதி -3
  2. முதலில் மூன்றையும் பொது மசாலாவில் ஊற வைக்க:-
  3. சிக்கன் முழு கால் துண்டுகள் -3
  4. கெட்டி தயிர் - 6 மேஜைக்கரண்டி( தண்ணீர் வடித்தது)ி
  5. இஞ்சி பூண்டு - ஒன்னரை தேக்கரண்டி
  6. தந்தூரி மசாலா - ஒன்னரை மேஜைக்கரண்டி
  7. எலுமிச்சை ஜுஸ் - 1 பழம்
  8. உப்பு - தேவைக்கு.
  9. சிவப்பு வர்ணம் வர:-
  10. பொது தந்தூரி மசாலாவில் ஊற வைத்த முழுக்கால் -1
  11. அத்துடன் மிளகாய்த்தூள்- அரை தேக்கரண்டி
  12. பின்ச் ரெட் கலர்.
  13. எண்ணெய் 2 தேக்கரண்டி
  14. கிரீமி வர்ணம் வர:-
  15. பொது மசாலாவில் ஊற வைத்த முழுக்கால் -1
  16. அரைத்து சேர்க்க:-
  17. ப்ரெஷ் கிரீம் - 1 மேஜைக்கரண்டி
  18. தட்டிய மிளகாய் -1
  19. பட்டர் அல்லது எண்ணெய் -2 தேக்கரண்டி
  20. சீரகம்,மிளகுத் தூள் - தலா கால் தேக்கரண்டி
  21. பச்சை வர்ணம் வர
  22. அரைக்க:-
  23. மல்லி,புதினா ஒரு கையளவு
  24. பச்சை மிளகாய் -2
  25. எலுமிச்சை ஜூஸ் -1 தேக்கரண்டி
  26. எண்ணெய் -1 தேக்கரண்டி.
  27. உப்பு சிறிது.

Instructions

  1. முழு சிக்கன் கால் துண்டுகளை அலசி ஆங்காங்கு கத்தியால் கீறி விட்டுக் கொள்ளவும்.தண்ணீர் வடிய வைக்கவும்.
  2. தண்ணீர் வடித்த சிக்கனை தந்தூரி மசாலா,கெட்டித்தயிர்,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சை ஜூஸ் ,உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. அதற்குள் மற்ற மசாலா தயார் செய்யலாம்.
  4. சிவப்பு நிறம் வர ஊற வைத்த கோழித்துண்டில் ஒன்றை எடுத்து அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள்,துளி சிவப்பு கலர், கடுகு எண்ணெய்,சிறிது உப்பு சேர்த்து கலந்து துண்டில் தடவி ஊற வைக்கவும்.
  5. கிரீமி நிறம் வர 1 மேஜைக்கரண்டி ப்ரெஷ் கிரீம்,கால் தேக்கரண்டி மிளகு,சீரகம் தூள், வெண்ணெய்,உப்பு சிறிது சேர்த்து கலந்து தடவி வைக்கவும்.
  6. பச்சை வண்ணம் வர பொதுவாக ஊற வைத்த சிக்கனை ஒரு துண்டு எடுத்து அரைத்த பச்சை மசாலாவை தடவி ஊற வைக்கவும்.
  7. பின்பு குக்கிங் ரேஞ்ச்சை 250 டிகிரிக்கு முற்சூடு 5 நிமிடம் செய்யவும்.
  8. பின்பு கிரில் ப்லேட்டில் எண்ணெய் தடவி ஊறிய சிக்கன் முழு கால் துண்டை வைக்கவும்.1/2 மணி நேரம் செட் செய்யவும்.
  9. கால் மணி நேரம் கழித்து திருப்பி வைக்கவும்.சிக்கனில் உள்ள தண்ணீர் எல்லாம் வடிந்து லேசாக சிவற ஆரம்பிக்கும்.
  10. மீண்டும் சிக்கன் துண்டுகளை திருப்பி வைக்கவும்,வெந்து சிவற ஆரம்பிக்கும் ,எடுத்து லேசாக பட்டர் தடவி பரிமாறவும்.
  11. மூவர்ண கிரில்டு தந்தூரி சிக்கனை எலுமிச்சை துண்டு,காய்கறி சாலட்டுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE