Home / Recipes / Baked Veg Pasta

Photo of Baked Veg Pasta by Asiya Omar at BetterButter
588
8
5.0(1)
0

Baked Veg Pasta

Mar-01-2018
Asiya Omar
20 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Hard
  • Dinner Party
  • Italian
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பாஸ்தா -200 கிராம்
  2. பிச்சமல் ரெடி மிக்ஸ் -75 கிராம்+500 மில்லி பால்
  3. துருவிய மொசரல்லா சீஸ் - 100 கிராம்
  4. நறுக்கிய கொடைமிளகாய் -1
  5. நறுக்கிய வெங்காயம் -1
  6. நறுக்கிய காளான் -200 கிராம்
  7. சில்லி கார்லிக் சாஸ் -2 தேக்கரண்டி
  8. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  9. உப்பு,மிளகுத்தூள் - தேவைக்கு.

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு,உப்பு,1 தேக்கரண்டி எண்ணெய் விடவும்.8 நிமிடம் வெந்து வடிகட்டி எடுத்து வைக்கவும்.
  2. ஒரு சாஸ் பேனில் பால் பிச்சமல் மிக்ஸ் கட்டியில்லாமல் கலக்கவும். இதற்கு பதில் வீட்டில் ஒயிட் சாஸ் செய்தும் சேர்க்கலாம்.
  3. அடுப்பை பற்ற வைத்து ,குறைவான தீயில் இந்த சாஸ் கெட்டியாகும் வரை கலக்கி, காய்ச்சி மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
  4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து நறுக்கிய வெங்காயம்,கொடைமிளகாய்,காளான் சேர்த்து வதக்கவும்.உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.சில்லி கார்லிக் சாஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  5. இப்பொழுது பாஸ்தா வேக வைத்தது,பிச்சமல் சாஸ்,காய்கறி வெந்தது தயார்.இனி பேக் செய்ய வேண்டும்.
  6. பேக்கிங் பவுலில் வேக வைத்த பாஸ்தாவில் பாதி வைக்கவும்,அதன் மேல் பாதி சாஸ்,வேக வைத்த காய்கறியில் பாதி, பின்பு மொசரல்லா சீஸில் பாதி வைக்கவும்.இரண்டு லேயர் வைக்க போகிறோம்.
  7. அடுத்தும் இதேபோல் போல் வைக்கவும்.
  8. கடைசியாக சீஸ் தூவவும்.
  9. ஓவனை 200 டிகிரிக்கு 5 நிமிடம் முற்சூடு செய்யவும்.ஓவனில் பேக்கிங் பவுல் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  10. மேலே சீஸ் உருகி லேசாக சிவற ஆரம்பிக்கும்.ஓவனை ஸ்விட்ச் அணைக்கவும்.எல்லாம் வெந்து தான் நாம் பவுலில் அடுக்கியிருக்கிறோம்.10 நிமிடம் விடவும்.
  11. கவனமாக எடுக்கவும்,சூடாக இருக்கும் பவுலை ஈரமில்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும்.ஈரத்தில் வைத்தால் பவுல் கீறிவிடும்.
  12. தேவைக்கு 4 பகுதிகளாக பிரித்து எடுத்து வெது வெதுப்பாக பரிமாறவும்.தேவைப்பட்டால் மிளகு பொடித்து தூவலாம்.
  13. சுவையான பேக்ட் வெஜ் பாஸ்தா தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.வீட்டில் செய்து கொடுத்தால் ஆரோக்கியம்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Subhashni Venkatesh
Aug-26-2018
Subhashni Venkatesh   Aug-26-2018

very tasty

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE