Home / Recipes / Spicy ragi butter milk kuzh

Photo of Spicy ragi butter milk kuzh by Krishnasamy Vidya Valli at BetterButter
414
6
0.0(0)
0

Spicy ragi butter milk kuzh

Mar-06-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy ragi butter milk kuzh RECIPE

இந்த கோடையை சமாளிக்க ஏற்ற உணவு இது. கொஞ்சம் வித்யாசமாக மசாலா சேர்த்து செய்துள்ளேன். காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் டிபன் சாப்பிடுவதற்கு மடித்து காபி/டீ சாப்பிடுகிறார்கள். அதற்கு பதில் இந்த கஞ்சி/கூழ் குடித்தால் உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்கும் . எளிதில் சாப்பிடலாம்/செய்யலாம். நீங்களும் டிரை செய்து பாருங்கள்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. மோர் -11/2 கப்(நன்றாக வெண்ணெய் எடுத்து கடைந்த மோர்)
  2. ராகி மாவு -4 மேஜைக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  5. வறுக்க
  6. கடலைப்பருப்பு -1/2 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி விதை-1/4 தேக்கரண்டி
  9. மிளகு -4
  10. சீரகம் -1 சிட்டிகை
  11. மிளகாய் வத்தல் -1
  12. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  13. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  14. எண்ணெய் -2 டிராப்ஸ்
  15. வதக்க
  16. சின்ன வெங்காயம் -5
  17. தக்காளி -1
  18. பச்ச மிளகாய் -1
  19. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/4 தேக்கரண்டி
  20. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  21. எண்ணெய் -1/4 தேக்கரண்டி

Instructions

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுக்கவும்
  2. வதக்க கொடுத்தவற்றை வதக்கவும்
  3. இரண்டையும் ஆறவைத்து கொத்தமல்லி இலையை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  4. அரைத்த விழுதை உப்பு சேர்த்து மோரில் கரைத்துக்கொள்ளவும்
  5. ராகி மாவை தண்ணீரில் நீர்க கரைத்துக்கொள்ளவும்
  6. அதை அடுப்பில் வைத்து கூழ் போல் காய்ச்சவும்
  7. ஆறவைத்து ஏற்கனவே செய்து வைத்த மோர் கலவையில் சேர்த்து கட்டி தட்டாமல் கலக்கவும். பெரிய பாத்திரத்தில் விட்டு நன்றாக இழுத்து ஆற்றியும் கலக்கலாம்.
  8. சீனியவரைக்காய் வத்தல் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE