Home / Recipes / Nargisi kofta

Photo of Nargisi kofta by Saivardhini Badrinarayanan at BetterButter
413
4
0.0(0)
0

Nargisi kofta

Mar-12-2018
Saivardhini Badrinarayanan
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nargisi kofta RECIPE

பன்னீர்,பசலைக்கீரை,பால், தயிர், பிரேஷ் கிரீம் வைத்து செய்த கோப்ஸ்தா கிரேவி

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Mughlai
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் துருவியது 1 கப்
  2. உருளைக்கிழங்கு வேக வைத்தது 1 கப்
  3. பசலைக்கீரை நறுக்கியது 1 கப்
  4. மைதா 2 மேஜைக்கரண்டி
  5. கார்ன் பிளார் மாவு 2 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. கொத்துமல்லி இலை 1/4 + 1/4 கப்
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  11. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  12. பிரட் தூள் 3 மேஜைக்கரண்டி
  13. தயிர் 1/4 கப்
  14. பால் 1/4 கப்
  15. பிரேஷ் கிரீம் 3 மேஜைக்கரண்டி
  16. பூண்டு 3 நறுக்கியது
  17. இஞ்சி சிறிய துண்டு
  18. பச்சை மிளகாய் 2 நறுக்கியது
  19. உப்பு தேவைகற்ப
  20. நெய் 1/4 கப்
  21. எண்ணெய் பொறிப்பதற்கு
  22. வறுத்த வெங்காயம் 1/2 கப்
  23. வறுத்த முந்திரி 1/2 கப்
  24. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி பூண்டு, இஞ்சி , பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின் நறுக்கிய பசலைக்கீரை, கரம் மசாலா, ஜீரக தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. வதக்கிய கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர் , மைதா, கார்ன் பிளார் மாவு, பிரட் தூள், உப்பு, கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து ஜீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரக தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  6. பின் வறுத்த வெங்காயம் மற்றும் வறுத்த முந்திரி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  7. அரைத்த விழுது கடாயில் சேர்த்து வதக்கவும். பின் அதில் கெட்டி தயிர் , பால் , பிரேஷ் கிரீம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து பொறித்த கோப்ஸ்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து கொத்துமல்லி இலை தூவி மற்றும் பிரேஷ் கிரீம் 1 மேஜைக்கரண்டி சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE