Home / Recipes / Sathumaavu burfi/ breakfast bars

Photo of Sathumaavu burfi/ breakfast bars by Priyadharshini Selvam at BetterButter
602
5
0.0(0)
0

Sathumaavu burfi/ breakfast bars

Mar-14-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sathumaavu burfi/ breakfast bars RECIPE

குழந்தைகளுக்கான தேர்வு சமய ஊட்டச்சத்தை அளிக்க கூடிய ஈசி ஸ்னாக் இது. காலையில் சிற்றுண்டி சாப்பிட்டு கிளம்ப நேரம் இல்லாதவர்கள் இதை ஒரு பார் எடுத்து கையில் சாப்பிட்டு கொண்டே போகலாம்/ படிக்கலாம். நீளமாக வெட்டினால் எனர்ஜி பார் என சொல்லப்படும் பிரேக்பாஸ்ட் பார் ஆகவும் இதை உண்ணலாம். மிகவும் சத்தானது. சாப்பிடவும் , டப்பாவில் போட்டு எடுத்து கொண்டு போகவும் வசதியாக இருக்கும்.

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 10

  1. சத்துமாவு 1 கப்
  2. பேரிச்சை மசித்தது 1 கப்
  3. நிலக்கடலை 1/4 கப்
  4. பாதாம் 1/4 கப்
  5. பிஸ்தா 1/4 கப்
  6. முந்திரி 1/2 கப்
  7. வால்நட் 1/4 கப்

Instructions

  1. பேரிச்சையை மிக்ஸியில் போட்டு அடித்து மசித்து கொள்ளவும்.
  2. அனைத்து பருப்பு வகைகளையும் ஒன்றுக்கு இரண்டாக பொடியாக்கி அல்லது நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு கிண்ணத்தில் இவை அனைத்தையும் சேர்த்து, சத்துமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு உதிரியாக பிரிந்தால் மேலும் சிறிது மசித்த பேரிச்சையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. ஒரு கிளிங் ராப் விரித்து அதில் இந்த மாவை வைத்து சப்பாத்தி போல் மொந்தமாக தேய்க்கவும்
  6. இதை இரண்டாக மடித்து மீண்டும் தேய்க்கவும்
  7. இதை மூன்றாக மடித்து மீண்டும் தேய்க்கவும். இப்படி மடித்து தேய்ப்பதினால் பர்பி கெட்டியாகவும் நாம் விரும்பும் வடிவத்தில் வெட்டவும் உதவும்.
  8. மேலும் இதை மடிக்கவும்.
  9. இது போல் நீளமாக தேய்த்து கொள்ளவும்.
  10. கடைசியாக இது போன்ற சதுர வடிவத்தில் கொண்டு வரவும். இதை 15 நிமிடம் பிரீஸிரில் வைக்கவும்
  11. பிரீஸிரில் வைத்து எடுத்தவுடன் பர்பி பதத்தில் கெட்டியாகி விடும். இப்போது நீளமாக வெட்டி காற்றி பூரத டப்பாவில் அடைத்து வைத்து தினமும் காலை சிற்றுண்டி எனர்ஜி பார் போல் உண்ணலாம்.
  12. சத்தான சத்துமாவு பர்பி செய்ய இதை மேலும் சிறு துண்டுகளாக வெட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE