Home / Recipes / Vellapaal kozhukattai

Photo of Vellapaal kozhukattai by விருதை சமையல் at BetterButter
311
4
0.0(0)
0

Vellapaal kozhukattai

Mar-19-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vellapaal kozhukattai RECIPE

வெல்லப்பால் கொழுக்கட்டை

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி மாவு - 200 கிராம்
  2. உப்பு - ஒரு சிட்டிகை
  3. கொதிக்க வைத்த நீர் - தேவையான அளவு
  4. வெல்லம் - 1 கப் 
  5. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  6. சுக்குப் பொடி - 1/2 தேக்கரண்டி  
  7. அரிசி மாவு - 1 தேக்கரண்டி (தனியாக) 
  8. தேங்காய்த் துருவல் - 1/4 கப்

Instructions

  1. வெல்லப்பாகு செய்முறை:
  2. வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். 
  3. பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.
  4. வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். 
  5. கொழுக்கட்டை செய்முறை:
  6. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து நன்றாக கிளறவும். 
  7. பின்பு கொதிக்க வைத்த நீரை மாவில் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  8. மாவை சுத்தமான ஈரத் துணியில் சுற்றிவைக்கவும். 
  9. ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். (சிறு நெல்லிக்காய் அளவு)
  10. அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். 
  11. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். 
  12. அடுப்பின் தணலைக் குறைத்து கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். 
  13. கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் வெல்லக் கரைசலை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். 
  14. அரிசி மாவு 1 தேக்கரண்டி  எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். 
  15. இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். 
  16. இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். 
  17. தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்
  18. சுவையான வெல்லப்பால் கொழுக்கட்டை தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE