Home / Recipes / Oil free - Bajra Curd Vada

Photo of Oil free - Bajra Curd Vada by Ayesha Ziana at BetterButter
340
3
0.0(0)
0

Oil free - Bajra Curd Vada

Mar-20-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oil free - Bajra Curd Vada RECIPE

கம்பு சிறுதானியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த குறிப்பானது கம்புமாவு கலவையை ஆவியில் வேக வைத்து, பின்னர் தயிரில் ஊற வைக்கும் எளிமையான செய்முறை. ருசியானதும் கூட.

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. கம்பு மாவு 1 1/4 கப்
  2. அரிசி மாவு 1/8 கப்
  3. காரம் குறைவான பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  4. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  5. தண்ணீர் 3/4 கப் அல்லது தேவைக்கேற்ப
  6. உப்பு தேவைக்கு
  7. தயிர் வடை செய்ய: கெட்டி தயிர் 200 கிராம்
  8. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  9. கேரட் 1 துருவியது
  10. பச்சை மிளகாய்/கொத்தமல்லி தழை சிறிது
  11. தாளிக்க: எண்ணெய் சிறிது
  12. கடுகு 1 ஸ்பூன்
  13. காய்ந்த மிளகாய் 1
  14. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை

Instructions

  1. ஒரு பவுலில் கம்பு மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், உப்பு, சீரகத்தூள், தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து, சிறு சிறு வடைகளாகத் தட்டி, இட்லிப்பானையில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  2. பின்னர் ஒரு பவுலில், தயிருடன் சிறிது உப்பு சேர்த்து லேசாக விஸ்க் செய்யவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து அதையும் தயிருடன் கொட்டி கலக்கவும். ஆவியில் வெந்த வடைகளை இந்த தயிர் கலவையில் சேர்த்து கலந்து, குறைந்தது 1 மணி நேரம் ஊற விடவும்.
  3. பரிமாறும் போது தயிரில் ஊறிய வடைகளை பிளேட்டில் வைத்து, மேலே வெங்காயத்தையும் கேரட்டையும் பச்சை மிளகாய்/கொத்தமல்லி தழையையும் தூவி, பரிமாறவும்..
  4. சூப்பர் சுவையில் ஆயில் ப்ரீ கம்பு தயிர் வடை தயார். இது குழந்தைகள் மட்டுமல்லாமல், எண்ணெயைத் தவிர்க்க விரும்பும் பெரியவர்களுக்கும் உகந்த செய்முறை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE