Home / Recipes / Sweet Corn Methi Pulav

Photo of Sweet Corn Methi Pulav by Sowmya Sundar at BetterButter
329
2
0.0(0)
0

Sweet Corn Methi Pulav

Mar-27-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஸ்வீட் கார்ன்-1/2 கப்
  2. வெந்தயக்கீரை- 1 கட்டு
  3. பாஸ்மதி அரிசி- 1 கப்
  4. தண்ணீர்- 3/4 கப்
  5. பால் -3/4 கப்
  6. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  7. வெங்காயம்-1
  8. பச்சை மிளகாய்-1
  9. இஞ்சி - 1 துண்டு
  10. பூண்டு -2 பல்
  11. சீரகம்-1 டீஸ்பூன்
  12. பட்டை-1 துண்டு
  13. கிராம்பு-2
  14. ஏலக்காய்-2
  15. பிரிஞ்சி இலை -1
  16. குங்கும பூ- 1/4 டீஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. நெய்-1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து விட்டு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். வெந்தயக்கீரையை அலசி வைத்து கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று ஒன்றிரண்டாக தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் நெய் விட்டு சீரகம் ,பட்டை,கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை தாளித்து கொட்டி வெங்காயம் ,இஞ்சி பூண்டு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் அதனுடன் கார்ன் மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். உப்பு , சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  5. இரண்டு நிமிடங்கள் கழித்து அரிசி சேர்த்து வதக்கவும்.பின் அதில் தண்ணீர் மற்றும் பால் விட்டு,குங்கும பூவை சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான மைல்ட்டான புலாவ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE