Home / Recipes / Mutton rava biriyani

Photo of Mutton rava biriyani by Benazer Abdul Kader at BetterButter
577
6
0.0(0)
0

Mutton rava biriyani

Mar-28-2018
Benazer Abdul Kader
40 minutes
Prep Time
92 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Pressure Cook
  • Boiling
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. மட்டன் குழம்பு செய்ய:
  2. மட்டன் 1/2 கி
  3. வெங்காயம் மீடியம் 2
  4. தக்காளி 1
  5. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  6. ரம்பை இலை அல்லது கருவேப்பிலை 1 கைப்பிடி
  7. கிராம்பு 2
  8. பட்டை 1 இன்ச்
  9. ஏலக்காய் 2
  10. மல்லி இலை 1/2 கப்
  11. மிளகாய் தூள் 1 1/2 தே க
  12. மல்லி தூள் 1 1/2 தே க
  13. பெருஞ்சீரகம் தூள் 3/4 தே க
  14. மஞ்சள் தூள் 1/4 தே க
  15. உப்பு தேவையான அளவு
  16. கறி மசாலா 1 தே க
  17. எண்ணெய் 3 தே க
  18. பிரியாணி செய்ய:
  19. கோதம்பு ரவை 2 கப்
  20. தண்ணீர் 4 கப்
  21. வெங்காயம் 1
  22. பச்சை மிளகாய் 1
  23. கருவேப்பிலை சிறிது
  24. தேங்காய் பால் பொடி 4 தே க
  25. உப்பு தேவையான அளவு
  26. மல்லி இலை சிறிது
  27. அண்டி பருப்பு 10
  28. உலர் திராட்சை 15
  29. நெய் 2 மே க

Instructions

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஏலக்காய், கருவேப்பிலை அல்லது ரம்பை இலை போட்டு வதக்கவும்
  2. பின்னர் மெலிதாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கீறி போட்டு வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின்னர் மசாலா தூள்கள் ஒவ்வொன்றும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின்னர் அரிந்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  6. பின்னர் மட்டன் குக்கரில் சேர்த்து 3_4 விசில் வரும் வரை விடவும். தேவைப்பட்டால் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  7. மட்டன் வெந்ததும் மல்லி இலை போட்டு இறக்கவும். மட்டன் குழம்பு கெட்டியாக இருப்பது நல்லது.
  8. பிரியாணி செய்ய :
  9. ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் விட்டு கருவேப்பிலை சேர்த்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
  10. பின்னர் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  11. கொதித்ததும் மட்டன் கறி மற்றும் தேங்காய் பால் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு பார்த்து கொள்ளவும்.
  12. இக்கலவை கொதித்ததும் கோதம்பு ரவை சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்
  13. தண்ணீர் லேசாக வற்றியதும் களறி விட்டு மூடி வைத்து பின்னர் தண்ணீர் நன்கு வற்றியதும் மீண்டும் கிளறி அடுப்பை அணைக்கவும்.
  14. பின்னர் மல்லி இலை தூவி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சையை போட்டு கிளறவும். கூடவே அந்த நெய்யையும் சேர்த்து கொள்ளவும்.
  15. ரிச்சான சுவையான காலை உணவு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE