Home / Recipes / Green Peas Poori

Photo of Green Peas Poori by Sowmya Sundar at BetterButter
409
5
0.0(0)
0

Green Peas Poori

Apr-04-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green Peas Poori RECIPE

பச்சை பட்டாணி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்த சுவையான பூரி. இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவை இல்லை.இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.சுலபமாக செய்து விடலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Indian
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு -2 கப்
  2. பச்சை பட்டாணி -1 கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. ரவை -2 டேபிள் ஸ்பூன்
  7. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  9. சீரகத்தூள் -1/4 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை - சிறிது
  11. நெய் -1 டீ ஸ்பூன்
  12. எண்ணெய்- பொரிக்க

Instructions

  1. பச்சை பட்டாணியை தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  2. பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கோதுமை மாவு, ரவை, உப்பு, நெய், சர்க்கரை ,மஞ்சள் தூள், சீரகத்தூள்,மல்லி தூள் ,கொத்தமல்லி தழை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. மாவை உருண்டைகளாக உருட்டி பூரிகளாக இட்டு கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு பூரிகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE