Home / Recipes / prawn vaada

Photo of prawn vaada by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
576
7
0.0(0)
0

prawn vaada

Apr-15-2018
Wajithajasmine Raja mohamed sait
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT prawn vaada RECIPE

இறால் வாடா ஒரு அத்தென்டிக் ஸ்நாக்ஸ் வகை .இது திருநெல்வேலி பக்கத்திலுள்ள காயல்பட்டிணம் என்ற ஊரில் மிகவும் பேமஸ்.முக்கியமாக நோன்பு காலங்களில் அனைவரும் விரும்பும் ஒன்று இந்த இறால் வாடா.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு -1 கப்
  2. தேங்காய் - 1/4 கப்
  3. இறால்- 6-8(பெரியது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.)
  4. சாதம்- 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  7. வெங்காயம் -1
  8. பச்சை மிளகாய் -2
  9. மாசி பொடி ( Dried tuna fish)-2 தேக்கரண்டி
  10. உப்பு -தேவையான அளவு
  11. எண்ணெய் -தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சாதத்தை சிறிதளவு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,2 தேக்கரண்டி தேங்காய் துருவல்,அரைத்த சாதம் உப்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு இடியாப்பம் மாவு போல் பிசைந்து கொள்ளவும் .
  4. இப்பொழுது வாடா செய்ய மாவு தயார்.மாவை 10 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும் .
  5. உள் அடக்கம் செய்ய அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும் .
  6. பின்பு இதனுடன் தேங்காய் துருவல்,மாசி பொடி சேர்த்து இலேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும் .
  7. இப்பொழுது உள் அடக்கம் தயார்.
  8. ஒரு ஈரமான துணியில் மாவினை கையால் வட்டமாக தட்டிக்கொள்ளவும்.
  9. உள் அடக்கத்தை ஒரு வட்டமான மாவில் வைக்கவும் .
  10. மற்றொரு தட்டிய மாவை வைத்து உஉள் அடக்கம் வைத்த மாவை மூடவும் .பின்பு அதை கையால் லேசாக அமுக்கி விடவும் .
  11. அனைத்து மாவையும் இது போல் செய்து கொள்ளவும் .
  12. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  13. இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எண்ணெய்யில் இருந்து எடுக்கவும் .
  14. சுவையான மொருமொருப்பான இறால் வாடா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE