Home / Recipes / Rava Kesari Balls

Photo of Rava Kesari Balls by Vins Raj at BetterButter
409
3
0.0(0)
0

Rava Kesari Balls

Apr-24-2018
Vins Raj
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava Kesari Balls RECIPE

மாலை நேரங்களில் சுவையுடன் சாப்பிட ஒரு வித்தியாசமான சுய்யம் இந்த ரவா கேசரி சுய்யம். வெளிப்பகுதி மொறுமொறுவென்றும் உள்ளே மிருதுவான ரவா கேசரி நாவிற்கு விருந்துபடைக்கும். செய்து பாருங்கள் சுலபமான செயல்முறையே..

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. 1/2 கப் ரவா
  2. 1 கப் சர்க்கரை
  3. 1 துளி கேசரி நிற பொடி
  4. 1 மே. க . நெய்
  5. 1/4 தே. க. ஏலக்காய் பொடி
  6. 1/2 கப் மைதா மாவு
  7. 3/4 கப் சேமியா
  8. 10 உலர்ந்த திராச்சை
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. முதலில் ரவா கேசரி செய்துக்கொள்ள வேண்டும். ரவையை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 1.5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  3. இப்பொழுது கேசரி நிற போடி சேர்க்கவும். ரவாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
  4. அடுப்பின் தீயை குறைத்து, பாத்திரத்தை மூடி போட்டு மூடவும். 3 நிமிடங்கள் வேகா விடவும்.நடு நடுவே கேசரியை கிளறி விட்டு மூடிவிடவும்.
  5. பின்னர் மூடி திறந்து 1 நிமிடம் வரை மிதமான தீயில் கட்டி பதத்திற்கு வரும் வரை கிளறி இறக்கிவிடவும்.
  6. ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
  7. ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் சூடாக்கி அதில் உலர்ந்த திராச்சை வறுத்து கேசரி யில் சேர்த்து கிளறவும்.
  8. எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
  9. மைதாவில் உப்பு சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  10. சேமியாவை ஒரு தட்டில் பரப்பி வைத்துக்கொள்ளவும்
  11. கேசரியை சிறு சிறு உருண்டையாக உருட்டி, மாவில் முக்கி, மாவு உருண்டை முழுவதும் ஒட்டி இருக்கவேண்டும்.
  12. பின்னர் சேமியா மீது உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.
  13. இதே செயல்முறையில் மீதமிருக்கும் உருண்டைகளையும் பொறித்துக்கொள்ளவும்.
  14. சுவையான கேசரி சுயயம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE