Home / Recipes / Traditional mutton gravy

Photo of Traditional mutton gravy by saranya sathish at BetterButter
640
6
0.0(0)
0

Traditional mutton gravy

May-09-2018
saranya sathish
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மட்டன் - 1/2 கிலோ
  2. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் - 1/2 கப்
  4. இஞ்சி, பூண்டு - சிறிது
  5. சீரகம் -1 டீஸ்பூன்
  6. மிளகு - 1டீஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  8. பட்டை - ஒரு சிறு துண்டு
  9. கிராம்பு - 4
  10. சோம்பு - 1 ஸ்பூன்
  11. கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
  12. வரமிளகாய் - 2
  13. கருவேப்பிலை - ஒரு கொத்து
  14. முந்திரி - 4
  15. எண்ணெய் - தேவையான அளவு
  16. உப்பு - சுவைக்கு

Instructions

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்னர் கடுகு சேர்த்து தாலிக்கவும்.
  2. பின் சிறிது வெங்காயம் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து தாலிக்கவும்.
  3. பின்னர் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மட்டன் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சட் செய்த சின்ன வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
  5. பின்னர் வரமிளகாய், கிராம்பு, பட்டை, கருவேப்பிலை, சோம்பு, கசகசா, சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. கடைசியில் கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆரவிடவும்.
  7. பின்னர் அம்மி கல்லில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  8. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் 1 வர மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  9. பின் உப்பு வேகவைத்த மட்டன், மட்டன் தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE