Home / Recipes / Chicken ghee roast

Photo of Chicken ghee roast by Nancy Samson at BetterButter
616
2
0.0(0)
0

Chicken ghee roast

May-12-2018
Nancy Samson
45 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken ghee roast RECIPE

வறுத்து அரைத்த மசாலாவில் ஊறவைத்து நெய்யில் வறுப்பது. அதிக சுவை கொண்டது.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • South Indian
  • Stir fry
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. கோழி இறைச்சி - 1/2 கிலோ
  2. நெய் - 1 குழிகரண்டி
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -1 கையளவு
  5. கறிவேப்பிலை - 7 இலைகள்
  6. காய்ந்த மிளகாய் - 10
  7. தனியா - 1 தேக்கரண்டி
  8. மிளகு - 1/2 தேக்கரண்டி
  9. சீரகம் - 1 தேக்கரண்டி
  10. சோம்பு - 1 தேக்கரண்டி
  11. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  12. இஞ்சி - 1 துண்டு
  13. பூண்டு - 6 பல்
  14. எலுமிச்சை சாறு - 1/2 பழத்தில் பிழிந்தது
  15. கெட்டி தயிர் - 1/4 கப்
  16. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  17. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.
  2. வறுத்து ஆரவைத்த பொருட்களுடன், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  3. இறைச்சியை கழுவி சுத்தம் செய்து, அரைத்த மசாலா, தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. அரை மணி நேரம் ஊறிய பிறகு, கடாயில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும், ஊறிய இறைச்சியை சேர்த்து வதக்கவும்.
  6. மூடி போட்டு சமைக்கவும், அவ்வப்போது கிளறி அடிப்பிடிக்காமல் குறைந்த தீயில் சமைக்கவும்.
  7. உப்பு காரம் உங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளவும்.
  8. இறைச்சி நன்கு வெந்து, நெய் பிரிந்து வரும்போது நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE